சொர்க்கவாசல் படத்தால் கைதி2வில் செய்யப்பட்ட மாற்றம்... லோகேஷ் சொன்ன சூப்பர் சம்பவம்

by Akhilan |
Lokesh_ RJ Balaji
X

Lokesh_ RJ Balaji

Lokesh kanagaraj: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படமான கைதி 2ல் சொர்க்கவாசல் படத்தால் சில மாற்றத்தை செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வெற்றி படமான கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த முதற்கட்ட வேலைகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் நான் தற்போது சொர்க்கவாசல் படத்தை பார்க்க வேண்டும். கைதி2 படத்தில் ஜெயில் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளது. அதை போல சொர்க்கவாசல் படத்தில் ஜெயில் காட்சிகள் இருக்கிறது.

அதை பார்த்தால் கைதி 2ல் மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்து இருக்கிறார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனரான சித்தார்த் விஸ்வநாத் இயக்கி இருக்கும் திரைப்படம் 'சொர்க்கவாசல்'.

ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை 1999ம் ஆண்டு மத்திய சிறைச்சாலையில் நடக்கும் கதையாக மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story