எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தியாகவே மாற்றியவர்!..இவர் இல்லையேல் மக்கள் திலகமும் இல்லை!..யாருனு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2022-10-11 09:38:35  )
mgr_main_cine
X

எம்.ஜி.ஆரை மக்களிடத்தில் இப்படி காட்டினால் தான் ஏற்ப்பார்கள், மக்களுக்கு எம்.ஜி.ஆரை இப்படி தான் பிடிக்கும் என எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து ரசித்து வடிவமைத்து படத்தில் காட்டியவர் இயக்குனரான ப. நீலகண்டன்.

mgr1_cine

ஆரம்பத்தில் நாடகங்களுக்கு வசனத்தை எழுதிக் கொண்டிருந்தவர் இவர் எழுதிய ஒர் நாடகத்தின் வசனத்தால் ஈர்க்கப்பட்டவர் தான் ஏவிஎம். மெய்யப்பச்செட்டியார். அந்த நாடகத்தை பார்த்து நீலகண்டனை அழைத்து அவர் எழுதிய நாடகத்தை படமாக்கினார் மெய்யப்பச்செட்டியார்.

mgr2_cine

அன்று முதல் தான் தயாரிக்கும் படங்களுக்கு நீலகண்டனையே வசனகர்த்தாவாக வேலைக்கு அமர்த்தினார் மெய்யப்பச்செட்டியார். இப்படி படிப்படியாக சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற நடிகர்களுக்கு நிறைய படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது நீலகண்டனுக்கு. இதுவே எம்.ஜி.ஆரை வைத்து இயக்கும் வாய்ப்பும் அதிகமாகவே கிடைத்தது.

இதையும் படிங்க : காசி படத்தால் விக்ரமுக்கு நேர்ந்த சோகம்… இதனால் தான் இப்படியோ!

mgr3_cine

வருடத்திற்கு ஒரு படம் வீதம் எம்.ஜி.ஆரை வைத்து 18 வெற்றிப்படங்களை கொடுத்தார் நீலகண்டன். எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களுக்கு நீலகண்டன் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.எம்.ஜி.ஆரை எப்படி காட்டினால் மக்கள் விரும்புவார்கள் என்று ஒவ்வொன்றையும் அறிந்து வைத்தவர். எம்.ஜி.ஆருக்கு என்று தனி சூத்திரம் இருக்கின்றது. அதை வகுத்தவரே ப. நீலகண்டன் தான். எம்.ஜி.ஆரை வசூல்சக்கரவர்த்தியாக மக்களில் ஒருவராக மக்களோடு இணைந்தவராக மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவராக மாற்றிய பெருமை ப. நீலகண்டனையே சேரும்.

Next Story