ஐயப்பனை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் இல்லை என்று நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.
தமிழகத்தில் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் ‘ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா’ என்கின்ற பாடலை கானா பாடகி இசைவாணி பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது கடவுள் ஐயப்பன் குறித்தும் அவருக்காக பின்பற்றும் விரதங்கள் மற்றும் வழிபாடுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடியதாக கூறி இசைவாணி மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதில் இந்து கடவுளையும் அவர்களின் வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தியதற்காக இசைவாணி மீது நிச்சியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சூர்யாவை விடாத கங்குவா ஜுரம்?!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!.. ஆனா இதுல அவரு தப்பிச்சுட்டாரு!..
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது ‘கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாடு முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு அந்த சமயத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதற்குப்பின் நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக இருந்தனர். அந்த சமயத்தில் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்ற இசை குழு உருவானது. அப்போதுதான் இந்த பாடலை பாடியிருந்தார்கள். ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமை கோருகிற வரிகளோடு கோயிலில் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாகத்தான் இப்பாடல் உருவாகியது.
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த பாடலை இசைவாணி மேடையில் பாடியிருந்தார். பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். ஐயப்பன் சம்பந்தப்பட்ட பாடலை இது கிடையாது. பெண்களுக்கு உரிமை கோரும் பாடல் ஆகும்.
இதையும் படிங்க: பட்டையை கிளப்பிய அமரன்!.. இதுதான் ஒரிஜினல் சக்சஸ் மீட்?!… ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா?!..
அதை மறைத்து மொத்த பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானது என்கின்ற ரீதியில் சமூக வலைதள பக்கங்களில் செய்தியை பரப்பி தங்களின் பெயரை கெடுக்க முயற்சி செய்கின்றார்கள். கடந்த ஒரு வார காலமாக பாடகி இசைவாணியை ஆபாசமாக சித்தரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூக வலைதள பக்கங்களில் அவர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்கள். எங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டு செயல்படும் ஒவ்வொருவரும் பாடகி இசைவாணிக்கு துணை நிற்க கேட்டுக்கொள்கின்றோம்’ என்று நீலம் பண்பாட்டு மையம் சார்பில் அறிக்கை வெளியாகி இருக்கின்றது.
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…
நடிகர் சூர்யாவை…