ஜெயலலிதாவை நீலாம்பரியாக மாற்றிய ரஜினிகாந்த்… இயக்குனரே போட்டு உடைத்த சீக்ரெட்…
கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் “படையப்பா”. இத்திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெகுஜன சினிமா ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத திரைப்படமாக “படையப்பா” திகழ்ந்து வருகிறது. இன்றும் அத்திரைப்படத்தை ரசித்து ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு. குறிப்பாக ரஜினிகாந்த் ஊஞ்சலை இழுத்துப்போட்டு ஸ்டைலாக உட்காரும் காட்சியை யாராலும் மறந்திருக்கமுடியாது.
“வயசானாலும், உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவே இல்லை” என்று ரம்யா கிருஷ்ணன் கூறும்போது “கூடவே பொறந்தது, என்னைக்கும் போகாது” என்று பதிலளிப்பார் ரஜினி. இந்த காட்சி ரசிகர்களுக்கு goosebumps ஏற்றிய காட்சி என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு காலத்துக்கும் பேசப்படும் மாஸ் காட்சியாக இந்த காட்சி திகழ்ந்தது.
அதே போல் “படையப்பா” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் குறித்து இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த பெண் கதாப்பாத்திரமாக அது அமைந்தது. மேலும் ரம்யா கிருஷ்ணன் அக்கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கென்றே எழுதப்பட்ட கதாப்பாத்திரம் போல் இருந்தது.
இந்த நிலையில் நீலாம்பரி கதாப்பாத்திரம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அதாவது நீலாம்பரி கதாப்பாத்திரத்திற்காக முதலில் நக்மா, மீனா ஆகியோரில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பதாக இருந்ததாம். ஆனால் அவர்கள் அக்கதாப்பாத்திரத்திற்கு செட் ஆகவில்லையாம்.
இதையும் படிங்க: 12 வருடங்களுக்கு முன்பு நடித்த யோகி பாபு… ஞாபகம் வைத்து வரவேற்ற ஷாருக் கான்… என்ன மனுஷன்யா!!
மேலும் அக்காலத்தில் ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்த்துக்கும் ஒரு மோதல் நிலவிவந்தது. ஆதலால் ஜெயலலிதாவை மனதில் வைத்துத்தான் நீலாம்பரி கதாப்பாத்திரம் எழுதப்பட்டதாம். அக்கதாப்பாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன்தான் சரியாக வருவார் என்று எண்ணியதால் அவரையே தேர்வு செய்ததாக அப்பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துகொண்டார்.
மேலும் நீலாம்பரி கதாப்பாத்திரத்தின் தாக்கம்தான் பாகுபலி சிவகாமி கதாப்பாத்திரம் எனவும், நீலாம்பரி என்ற பெயரை ரஜினிகாந்த்தான் தேர்வு செய்தார் எனவும் அப்பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.