நீங்க போனாலும் போனீங்க...சீரியலும் போச்சு..! புகைப்படத்தை வெளியிட்டு புலம்ப வைத்த அழகுராணி..
கர்ப்பம், பிரசவம், மாமியாருக்காக மருத்துவமனைகளை சுற்றி ஓடுவது, மன அழுத்தத்தால் தூக்கமில்லாத இரவுகள் என ஒரு வருட கால ஓய்விற்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க புது தோற்றத்துடன் மீண்டும் களத்தில் நடிகை நீலிமாராணி.
சின்னத்திரை நடிகையான நீலிமாராணி குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கார்த்தி நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் அவ்வப்போது போட்டோ சூடி எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாகக்
கொண்டுள்ள நீலிமா இப்பொழுது சேலையில் அழகான தோற்றத்துடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.