விஜய் இந்த படத்தில் என் ஸ்டைலை தான் பாலோ செய்தார்.. விஜய் சாரதி சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
Vijay: விஜய் தன்னுடைய படத்தில் என்னோட ஸ்டைலை அப்படியே செய்து இருப்பார் என நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி சொல்லி இருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்து இருக்கும் பேட்டியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சாரதி இந்த பெயரை தெரியாத 90ஸ் கிட்ஸே கிடையாது. பாடல் தொகுத்து வழங்கி அதை அவர் ஸ்டைலில் எதுவும் சுற்றுலா தளத்தின் சிறப்பை சொல்லும் அந்த நிகழ்ச்சிக்கு அப்போது நிறைய ரசிகர்கள் இருந்தனர் என்பதுதான் உண்மை. அவர் தற்போது அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..
இதில் அஜித் மற்றும் விஜய் குறித்து ஆச்சரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்தை பேட்டி எடுத்த போது கால் மேல் கால் போட்டு பேசி இருப்பார். அது அப்போது சர்ச்சையானது. தற்போது தான் ஏன் அப்படி உட்கார்ந்து இருந்தேன் என்பது குறித்து தெளிவாக விளக்கம் அளித்து இருக்கிறார்.
இது குறித்து நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தது. நான் அதை ஸ்கீரின்ஷாட் எடுத்து அஜித்துக்கு இமெயில் செய்தேன். அவர் உடனே எனக்கு கால் செய்தார். இதுக்கா கவலைப்படுகிறீர்கள். கண்டுக்காம விடுங்க என அட்வைஸ் செய்தார். அதன் பின்னர் எங்க இருவருக்குமே நல்ல நட்பு இருந்தது.
இதையும் படிங்க: அப்பாவுக்காக கொஞ்சமா செஞ்சாலும் தப்பு தான் முத்து… கூட்டத்தில் மொத்தமாக ரவிக்கு, மனோஜுக்கும் ஆப்பா..!
விஜயை ஒருமுறை பேட்டி எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போ ஒரு கட்டத்தில் நானும், விஜயும் தனியாக இருந்தோம். அவர் என்னிடம் ஒன்னு கேட்பேன். தப்பா எடுத்துக்கக்கூடாது என்றார். நான் சொல்லுங்க எனக் கேட்க ஏன் பின்னாடியே நடக்குறீங்க எனக் கேட்டார்.
நான் முதலில் கலாய்த்து விட்டு பின்னர் கேமராவுக்கு என்ற உண்மையை சொன்னேன். சச்சின் படத்தில் ப்ரேக் என விஜய் சொன்ன காட்சி என்னோட ஸ்டைல் தான். அது தான் எனக்கு பெரிய அங்கீகாரமே எனவும் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார். தற்போது அந்த பேட்டி 90ஸ் கிட்ஸிடம் வைரலாக தொடங்கி இருக்கிறது.
அவர் பேட்டியைக் காண: https://www.youtube.com/watch?v=CiEnyTJejas