Connect with us
iraivan

Cinema News

காண்டாக்கிய இறைவன்!… கல்லாகட்ட போகும் சந்திரமுகி 2.. ராகவா லாரன்ஸுக்கு எங்கயோ மச்சம்!..

Iraivan chandramukhi 2: சில சமயம் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிவிடும். எம்.ஜி.ஆர் – சிவாஜி துவங்கி, ரஜினி – கமல் வரை அது தொடர்ந்தது. 80களில் ரஜினி, கமல், மோகன் உள்ளிட பல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும். ஆனால், எல்லாமே ஹிட் அடிக்கும். இப்போது படங்களில் அப்படி வெளியாவதில்லை.

இப்போது ரஜினி படம் வெளியாகும் போது கமல் படம் வருவதில்லை. அதேபோல், விஜய் படம் வரும் போது அஜித் படம் வருவதில்லை. பல வருடங்களுக்கு பின் விஜயின் வாரிசு படத்தோடு தனது துணிவு படத்தை வெளியிட்டு ஜெயித்தும் காட்டினார் அஜித். இது எல்லோருக்கும் அமையாது.

இதையும் படிங்க: என்ன சார்…பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க…சந்திரமுகி2வை பங்கமாய் கலாய்த்த மீசை ராஜேந்திரன்…

ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒன்றாக வெளியாகி விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக வசூலை குவித்தது. சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அந்த படம் அதிக வசூலை பெறும் என்பதுதான் கணக்கு. சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வசூலை பெற்றது.

அதேபோல் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படமும், ஜெயம்ரவியின் ‘இறைவன்’ படம் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதில், சந்திரமுகி 2 படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இறைவன் படம் வெகு சிலருக்கு மட்டுமே பிடித்திருக்கிறது. இப்படம் பற்றி எதிர்மறையாகவே பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்களை காப்பாத்த இறைவன்தான் வரணும்! – ஜெயம் ரவின் ‘இறைவன்’ பட விமர்சனம் இதோ!…

ஆனால், சந்திரமுகி 2 குடும்பத்துடன் பார்க்கலாம் என பேசி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது வெளியான இரண்டு படங்களில் சந்திரமுகி 2 படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. இறைவன் படத்தில் சுவாரஸ்யம் இல்லாத மிகவும் மெதுவாக செல்லும் திரைக்கதை.. கணிக்க கூடிய காட்சிகள் என படம் பொறுமையை சோதிப்பதாக பலரும் கூ வருகின்றனர். அதோடு படத்தின் நீளமும் பெரிய குறை என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு படங்கள் ஒன்றாக வெளியாகும்போது ஒரு படம் நன்றாக இல்லை என விமர்சனங்கள் வந்தாலே மற்ற படத்திற்கு அது சாதகமாக முடியும். தற்போது அது சந்திரமுகி 2-வுக்கு அமைந்துவிட்டது. இறைவன் ஜெயம் ரவிக்கு தோல்விப்படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: லியோ படத்தில் களமிறங்கிய கமல்!.. தரமான சம்பவம் செய்த லோகேஷ்!.. அப்ப LCU கன்பார்ம்….

google news
Continue Reading

More in Cinema News

To Top