Connect with us

சிம்புவுக்கு கதை கூறும் பீஸ்ட் நெல்சன்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..,

Cinema News

சிம்புவுக்கு கதை கூறும் பீஸ்ட் நெல்சன்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..,

நெல்சன் திலீப்குமார் , இந்த பெயரை தமிழ் சினிமாவை கொஞ்சம் கவனித்து பார்த்தவர்களுக்கு கோலமாவு கோகிலா பட இயக்குனர் என தெரிந்திருந்தது. அதற்கடுத்து, டாக்டர் எனும் சூப்பர் ஹிட் பட இயக்குனர் என தெரியும்.

தற்போது பீஸ்ட் இயக்குனர் நெல்சன் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் பெரிய பொறுப்பை தைரியமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவரது அடுத்தடுத்த வளர்ச்சி மேம்போக்காக பார்த்தால் எல்லாம் உடனடியாக கிடைத்தது போல இருக்கும்.

ஆனால் அவரது முதல் படம் ரிலீசுக்கு முன்னர் கடுமையாக உழைத்துள்ளார் என்பது சினிமாவை நன்கு கவனித்து வந்தவர்களுக்கே தெரியும். அவரது முதல் படம் வேட்டை மன்னன். அந்த படத்தின் ஹீரோ சிம்பு

முதலில் சிம்புவை வைத்து தான் முதல் படத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு எதை காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. பிறகு, விஜய் டிவியில் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். அதன் பின்னர் தான் படம் இயக்கும் வாய்ப்பை நெடுநாள் கழித்து பெற்றுள்ளார் இயக்குனர் நெல்சன்.

இதையும் படியுங்களேன் – கழுத்தை நெறிக்கும் கடன்!….தப்பிக்க கமல் போட்ட திட்டம் இதுதானாம்.!

நெல்சன் இயக்க ஆரம்பித்த முதல் படமான வேட்டை மன்னன் படத்தில் இருந்து சில ஷூட்டிங் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. இன்று புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நெல்சன் கையில் மைக் உடன் சிம்புவிடம் கதைக்களத்தை கூறுவது போல கட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top