Categories: Cinema News latest news

ஒரே பெண்ணை சைட் அடித்து மாட்டிய நெல்சன் & யுவன்… வீடியோவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்…!

முன்பு இருந்த சினிமா உலகம் தற்போது இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இப்போது உள்ள இளைய தலைமுறை இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நட்பாக மிகவும் ஜாலியாக கேலி கிண்டல் செய்து அரட்டை அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நெல்சன் அனிருத் யுவன் சங்கர் ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் லோகோஷ் கனகராஜ் என ஒரு குட்டி டீம் நண்பர்களாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குனர் நெல்சன் மற்றும் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் ஒரு சிறப்பான சம்பவம் செய்து மாட்டியுள்ளனர்.

nelson

அதன்படி சமீபத்தில் behindwoods நிறுவனத்தின் கோல்ட் மெடல் விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற நெல்சன் மற்றும் யுவன் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து மிகவும் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

yuvan

அப்போது அந்த வழியாக ஒரு பெண் அவர்களை கடந்து செல்ல இருவரும் சட்டென ஒரு நிமிடம் அந்த பெண்ணை பார்க்கிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது மீம்கிரியேட்டர்கள் கையில் சிக்கியுள்ளது. உடனே அவர்கள் சும்மா இருப்பார்களா என்ன வீடியோவை டிரோல் செய்ய தொடங்கி விட்டார்கள்.

மேலும் இந்த வீடியோவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள் ஒரே பெண்ணை சைட் அடிக்கும் அளவிற்கு குளோஸ் பிரண்ட்ஸ் தான் இப்போது உள்ள திரைபிரபலங்கள் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
ராம் சுதன்