ரஜினி படம் கை விட்டு போனதா?!...டிவிட்டரில் நெல்சன் செஞ்ச வேலைய பாருங்க!....
நெல்சன் இயக்கத்தில் கடந்த 13ம் தேதி விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக இப்படத்திற்கு எதிராகவும், கிண்டலடித்தும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் இருந்த திரைக்கதை நேர்த்தி பிகில் படத்தில் இல்லை எனவும், நெல்சன் விஜய்க்காக காம்பிரமைஷ் செய்து வேறு மாதிரியான படத்தை கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் எனவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்தன. குறிப்பாக சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, போர் அடிக்கும் இரண்டாம் பாதி, லாஜிக் இல்லாத ஆக்ஷன் காட்சிகள் என பல விஷங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதாக பலரும் தெரிவித்தனர்.
பிகில் பட வேலைகள் நடந்து கொண்டிருந்த போதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பீஸ்ட் பார்த்த ரஜினிக்கு அப்படம் பிடிக்கவில்லை எனவும், எனவே, நெல்சனுகு பதில் அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி என இவர்களில் ஒருவர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் எனவும் செய்திகள் கசிந்தது.
மேலும், நெல்சன் தனது டிவிட்டர் பயோ பக்கத்தில் #Thailavar 169 என்கிற ஹேஷ்டேக்கை நீக்கிவிட்டதாகும் சிலர் செய்தி வெளியிட்டனர். ஆனால், அது பொய்யாக உருவாக்கப்பட்டதாக்வும், நெல்சன் இதுவரை அந்த ஹேஷ்டேக்கை பயோவில் சேர்க்கவே இல்லை எனவும் பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெல்சன் தனது பயோவில் #Thailaivar169 என்கிற ஹேஷ்டேக்கை சேர்த்துள்ளார். எனவே, ரஜினியின் அடுத்த பட இயக்குனர் நெல்சன்தான் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.