ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?

by Saranya M |   ( Updated:2024-02-28 09:04:37  )
ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
X

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா மேனன், ரித்தி ராக்ஸ், விநாயகம் உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

சிவாஜி நடித்த தங்க பதக்கம் படத்தின் கதையை அப்படியே உல்டா செய்து நெல்சன் எடுத்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த படத்தின் வசூல் அந்த படத்தை மட்டுமின்றி தமிழ் சினிமாவையே கடந்த ஆண்டு காப்பாற்றியது.

இதையும் படிங்க: கேமியோ ரோலே இனிமே வேண்டாம்!… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த பட அப்டேட்..!

லியோ படத்தில் தப்பான அப்பா மகனை எப்படி கொல்வார் என பிரச்சனை பண்ண ரசிகர்கள், ஜெயிலர் படத்தில் நேர்மையான அப்பா தனது மகனை சுடச் சொல்லி கொல்லும் போது யாரும் கேள்வி எழுப்பவே இல்லை.

அந்த அளவுக்கு ரஜினிகாந்தின் மாஸ் அவதாரை பார்த்து அந்த படத்தை ஹிட் ஆக்கி விட்டனர். அடுத்து ஜெயிலர் 2 படத்தை தான் நெல்சன் இயக்கப் போகிறார் என்றும் மற்ற எந்த ஹீரோவுக்கும் அவர் கதை பண்ணல என தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: மெரீனா பீச்சில் உருவான செம காமெடி படம்…! சும்மா பேசிப் பேசியே டெவலப் பண்ணினதுதானாம்..

ஆனால், அந்த படத்திற்கு கதை எல்லாம் ரெடி பண்ணாமல் வழக்கம் போல ஒரு படத்தை முடித்து விட்டு வெளிநாட்டில் தனது குடும்பத்துடனும் நெருங்கிய நண்பர்களுடன் ஜாலி டூர் சென்றிருக்கிறார்.

நெல்சன், மோனிஷா நெல்சன் உடன் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் உள்ளிட்டோரும் வெளிநாட்டு தீவில் பீச்சில் ஜாலியாக ஹாலிடேவை என்ஜாய் பண்ணும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் வேட்டையன் மற்றும் தலைவர் 171 படத்தை முடித்து விட்டுத் தான் ஜெயிலர் 2 பக்கம் வருவார் என தெரிகிறது. அதற்கு நடுவே பாலிவுட் தயாரிப்பாளர் படம் ஒன்றிலும் அவர் கமிட் ஆகியிருக்கிறார்.

Next Story