ஜெயிலர் 2வா?.. உருட்டுருவன் ஆயிரம் உருட்டுவான்.. ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நெல்சன்!..

by Saranya M |
ஜெயிலர் 2வா?.. உருட்டுருவன் ஆயிரம் உருட்டுவான்.. ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நெல்சன்!..
X

இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கையே சத்தமில்லாமல் ஆரம்பித்து நடத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் ஜாலியாக வெளிநாட்டில் டூர் அடித்துக் கொண்டிருந்த போட்டோக்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், பிரபல் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நெல்சன் ரஜினி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வேட்டையன் படம் தான் ரிலீஸ் ஆகப் போகிறது. அதன் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக ரஜினிகாந்தே சமீபத்திய பேட்டியில் கூறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கின்றனர். மேலும், வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்குத்தான் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: படம்தான் தக் லைஃப்!.. நிஜத்தில் காஸ்ட்லி லைஃப்!. மணிரத்னத்தின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?!..

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்திலும் தனது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கங்குலியின் பயோபிக் படத்தில் கேமியோ ரோலிலும் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

இதையெல்லாம் முடித்து விட்டுத்தான் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதா? வேண்டாமா என ரஜினிகாந்த் முடிவெடுக்க வேண்டும். இதற்கு எப்படியோ இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இந்நிலையில், அடுத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கப் போறீங்களா என்கிற கேள்விக்கு சிரித்து சமாளித்த நெல்சன், அப்படி நிறைய சொல்வாங்க, ஆனால், எந்த படத்தை இயக்கப் போறேன் என இன்னும் ஒரு மாசத்தில் கூறி விடுகிறேன் என கூலாக பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசில நாசருமா? வடிவேலு யாரையும் விட்டுவைக்கல போல.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

அடுத்து யாரை நெல்சன் இயக்கப் போகிறார் என கோலிவுட்டே மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் தளபதி 69 இயக்குநர் இவர் என சொல்லிவிட போகின்றனர் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story