தலைவர் 169 : என்னப்பா ஈகோ!.. உடைச்சி சொல்லு!...நெல்சனிடம் காண்டான ரசிகர்கள்....

by சிவா |   ( Updated:2022-04-22 04:14:59  )
தலைவர் 169 : என்னப்பா ஈகோ!.. உடைச்சி சொல்லு!...நெல்சனிடம் காண்டான ரசிகர்கள்....
X

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். டாக்டர் படம் மாபெரும் ஹிட் அடித்ததால் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால், அவரின் பாணியிலிருந்து விலகி விஜய்க்காக கதை மற்றும் காட்சிகளை மாற்றி சொதப்பி வைத்ததால் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரவில்லை. பீஸ்ட் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், பீஸ்ட் படத்திற்கு எழுந்த கலவையான விமர்சனங்கள் ரஜினியையும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் யோசிக்க வைத்ததால் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டார் நெல்சன். எனவே, ரஜினியின் படத்தை அவர் இயக்குவாரா மாட்டாரா என்கிற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

nelson

திடீரென நெல்சன் தனது டிவிட்டர் பயோ பக்கத்தில் #Thalaivar169 என்கிற ஹேஷ்டேக்கை சேர்த்தார். அதன் மூலம், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது நான்தான் என மறைமுகமாக கூறினார்.

nelson

ரஜினி பட அறிவிப்பு என்பது முக்கியமான விஷயம். இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்ட பின், ரஜினி படத்தை இயக்குவது நான்தான் என ஒரு டிவிட் போட்டால் குழப்பம் தீர்ந்துவிடும். அதை விட்டுவிட்டு டிவிட்டரில் அதையும் இதையும் மாற்றி ரசிகர்களை குழப்பி வருகிறார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘அப்படி என்னப்பா ஈகோ... எதுனாலும் உடைச்சி சொல்லு’ என நெல்சனை திட்டி வருகின்றனர்.

Next Story