ஜெயிலர் ஹிட்டுக்கு பின் நெல்சன் ப்ளான் இதுதானா? ஆனா கோலிவுட் இல்லையாம்.. என்ன ஜி இப்படி?

Nelson Dilipkumar: தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நெல்சன் திலீப்குமார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் பெரிய ஸ்டார்கள் இல்லை. இதனாலே இயக்குனரான நெல்சனுக்கு வரவேற்பு குவிந்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தினை இயக்கினார். ரொம்ப ஜாலி டைப்பான சிவாவை வைத்து டார்க் காமெடி ஜானரை எடுத்தது மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. டாக்டர் படமும் வெற்றி வசூலை குவித்தது. இப்படமும் ஹிட் அடிக்க நெல்சனுக்கு கோலிவுட்டில் அடையாளம் உருவாகியது.

இதையும் படிங்க: அனிமல் விமர்சனம்: ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு!.. அதை மட்டும் சரி செஞ்சிருக்கலாம் சந்தீப் ரெட்டி!

இந்த இரண்டு படங்களின் வெற்றியால் விஜயை வைத்து பீஸ்ட் படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது படமே மிகப்பெரிய ஹீரோ என்பதால் நெல்சன் கேரியர் இனி உச்சம் எனப் பேச்சுகள் எழுந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே அடுத்த பெரிய வாய்ப்பு.

ரஜினிகாந்தினை வைத்து ஜெயிலர் படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நெல்சன் லெவல் மாறும் என நினைக்க தொடங்கினர் ரசிகர்கள். ஆனால் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மொத்த நினைப்பையும் உடைத்தது. படம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அவரின் கேரியர் காலி என்ற பேச்சுகள் வந்தது. ரஜினிகாந்தின் ஜெயிலரில் இருந்து தூக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: இது வரைக்கும் கேமிரா பாத்து சொன்னதில்லை! வெட்கமே இல்லாம இவ்வளவு ஓப்பனா சொன்ன சரவணவிக்ரம்

ஆனால் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தினை அவரே இயக்க ரஜினிகாந்த் ஓகே சொல்லினார். அதை தொடர்ந்து விருது விழாவில் நடந்த அவமானம் என நெல்சனுக்காக ரசிகர்களே ஒரு கட்டத்தில் ஜெயிலர் ஓடிவிட வேண்டும் என வேண்ட தொடங்கினர்.

படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படத்தின் வசூல் குவிந்தது. தயாரிப்பு நிறுவனமான சன் டிவி நெல்சனுக்கு காரை பரிசளித்தது. இதை தொடர்ந்து நெல்சனின் அடுத்த பட ஹீரோ அல்லு அர்ஜீன் தான் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படம் ஃபேன் இந்தியா லெவலில் ரிலீஸாகும். புஷ்பா இரண்டாம் பாகம் முடிந்த கையோடு ட்ரைவிக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார். அதையடுத்து, இந்த படத்தில் அல்லு அர்ஜூன் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதன்முறையாக ஒரே நடிகரின் இரு படங்கள் ரிலீஸ்!. ரெண்டுமே சூப்பர் ஹிட்!.. கெத்து காட்டிய நடிகர் திலகம்…

Related Articles
Next Story
Share it