வாவ்!.. நெல்சனின் மனைவி இவ்வளவு அழகா?!. தீயாக பரவும் ஃபேமிலி போட்டோ!...
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் நெல்சன். விஜய் டிவியில் பல வருடங்கள் இவர் வேலை செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் இயக்கியுள்ளார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே சூப்பர் ஹிட். பிளாக் காமெடி கலந்த திரைக்கதை அமைப்பது நெல்சனின் ஸ்டைல் ஆகும்.
அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். வழக்கமாக வழவழவென பேசும் சிவகார்த்திகேயனை மிகவும் அளந்து பேச வைத்தார். அதோடு, வழக்கமான பிளாக் காமெடி இந்த படத்திலும் வொர்க் அவுட் ஆனது. பல காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
அடுத்து விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிளாக் காமெடி இருந்தாலும் வீக்கான வில்லன், சுவாரஸ்யமில்லாத திரைக்கதை ஆகியவற்றால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஜெயிலர் படத்தில் விஜய் சேதுபதியா?!.. நடிக்காமல் போனதற்கு காரணம் நெல்சனா!.. இது எப்ப?!..
இப்போது, ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து நானும் ரேஸில் இருக்கிறேன் என நிரூபித்துள்ளார். படம் வெளியாகி 4 நாட்கள் இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் ஏதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நெல்சன தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நெல்சனின் அழகான மனைவியை பார்த்த நெட்டிசன்கள் ‘செம க்யூட்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளியில் இருந்தே ஆட்டம் காட்டும் ரஜினி – சர்வதேச தலைவர்களையும் அசரவைத்த ‘ஜெய்லர்’..