More
Categories: Cinema News latest news

ஏற்கனவே அந்த ஹீரோ மார்க்கெட் சுமார்தான்.! இதுல ‘பீஸ்ட்’ நெல்சன் இயக்கத்தில் அவரா.?!

கோலமாவு கோகிலா, டாக்டர் பட திரைப்படங்களை பார்த்து, டாக்டர் படம் ரிலீஸ்க்கு முன்பே இயக்குனர் நெல்சனை தளபதி விஜய் தனது  அடுத்தப்பட இயக்குனராக கமிட் செய்துவிட்டார். அதன் பிறகு தான் டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.

Advertising
Advertising

அதனை கண்டதும் தளபதி ரசிகர்களுக்கு கூடுதல் தெம்பாக அமைந்தது. அதன் பிறகே, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது.

ஆனால், இயக்குனர் நெல்சன், தனது பாணியிலான காமெடி கதைக்களத்தையும் கையாளாமல், அதிரடி ஆக்சன் கதைக்களமாகவும் இல்லாமல் பீஸ்ட் நிறையவே தடுமாறியது. அதன் ரிசல்ட் முதல் 5 நாள் கழித்து தெரியவர ஆரம்பித்தது.

இதையும் படியுங்களேன் – சன் பிக்ச்சர்ஸின் சூசக திட்டம்.! இன்னும் இந்த சுவர் எத்தனை பேர காவு வாங்க போகுதோ.!?

அதே போல, மீண்டும் பீஸ்ட் ரிலீஸ்க்கு முன்பே ரஜினியின் 169வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு நெக்லனுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வேளைகளில் நெல்சன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் யாரை இயக்க உள்ளார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.

அதன் படி, இயக்குனர் நெல்சன் அடுத்ததாக, தனுஷை இயக்க உள்ளார் என்கிற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் உலா வருகிறது. தலைவர் 169 திரைப்பட வேலை இறுதி கட்டத்தை நெருங்கும் போது தனுஷ் பட ஸ்க்ரிப்ட் வேலைகளை நெல்சன் ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.  ஏற்கனவே தனுஷிற்கு ஜகமே தந்திரம், மாறன் என மார்க்கெட் கொஞ்சம் குறைந்துள்ளது. நெல்சனுக்கும்  மவுசு கொஞ்சம் குறைந்துள்ளது. இதனை இருவரும் துடைத்து எரிவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
Manikandan

Recent Posts