ரஜினியை நெருங்க நெல்சன் போடும் பக்கா பிளான்..! ஆப்பு வைக்க காத்திருக்கும் ஸ்லிம் பாடி..
கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி அண்மையில் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரன இந்த படம் படு தோல்வியை சந்தித்தது.ஆனாலும் திரையரங்குகளில் விஜய்க்காகவே மக்கள் இந்த படத்தை பார்க்க வந்து கொண்டிருக்கின்றனர்.
வசூல் ரீதியில் இந்த படம் பெரும் சாதனையை படைத்தது. இந்த படத்தின் விமர்சனம் இன்னும் வரையில் பேசப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் கூட அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ரசிகர்கள் சிலர் வேண்டாத கருத்துக்களையும் கூட கூறி வந்தனர்.
மேலும் நடிகர் ரஜினி அவர்கள் இந்த படத்தை பார்த்து மௌனமாக இருந்தார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இதற்கிடையில் நெல்சன் ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் கூட வெளிவந்தது. பீஸ்ட்டின் தோல்வியால் நெல்சன் ரஜினி பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நெல்சன் ரஜினியை வைத்து தன் அடுத்த படத்தை கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். ஆதலால் இசையமைப்பாளர் அனிருத்தை அணுகியுள்ளாராம். அனிருத்தை வைத்து ரஜினியிடம் பேசவைக்க முயற்சி செய்கிறாராம்.
இதையடுத்து, பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ரஜினி ரிஸ்க் எடுக்க கூடாது. அனிருத் மூலம் ஆப்பு வைக்க நினைக்கிறார் நெல்சன். ரஜினி வேறு இயக்குனரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.