லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்னு அழுத நயன்தாரா!.. மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்துல நடிக்கப் போறாராம்!..

by Saranya M |   ( Updated:2024-01-21 20:57:45  )
லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்னு அழுத நயன்தாரா!.. மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்துல நடிக்கப் போறாராம்!..
X

நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனக்கு லேடீ சூப்பர் ஸ்டார் பட்டமே தேவையில்லை என்றும் பலர் திட்டுகின்றனர் என்றும் பேசியிருந்தார் நயன்தாரா. கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலரும் நயன்தாராவை ஒதுக்கி வரும் நிலையில், தன்னை நம்பி முதல் படத்தை கொடுத்த நயன்தாராவுக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த இயக்குனர் நெல்சன் தற்போது தான் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இந்தியன் 2 ஏப்ரல் மாதம் கூட வராது!.. அந்த பிரபலத்துக்கும் ஷங்கருக்கும் சண்டை.. பத்த வச்ச பயில்வான்!

ஜெயிலர் படத்தில் கோலமாவு கோகிலா கனெக்சனை நெல்சன் கொண்டு வரப் போகிறாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த வரும் நிலையில் அவரது யங் லுக்கில் நயன்தாராவை நடிக்க வைக்க போகிறாரா? அல்லது தமன்னா வந்ததுபோல தனி போர்ஷனாக இருக்குமா? என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். குசேலன், தர்பார், அண்ணாத்த என பல படங்களில் ரஜினிகாந்துடன் ஜோடி போட்டு நடித்த நயன்தாரா மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கப் போகிறார் என கோலிவுட் பரபரப்பாகியுள்ளது. வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என அடுத்தடுத்து இரண்டு படங்களை முடித்துவிட்டு தான் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்காக பாடலாசிரியரை 12 முறை அலைக்கழித்த எம்.ஜி.ஆர்!. அட அது செம ஹிட் பாட்டாச்சே!..

Next Story