கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் காமெடி திரைப்படங்களையும் கொடுத்த நெல்சன் அடுத்ததாக இயக்கிய திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது.
இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கே.ஜி.எப்-2 எனும் பிரமாண்ட திரைப்படத்திற்கு போட்டியாக களமிறங்கியது. அதனால் இந்த திரைப்படம் எப்படியும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை திரைப்படம் பெறவில்லை.
இதன் காரணமாக இணையத்தில் இயக்குனர் நெல்சனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து, வச்சி செய்து வருகின்றனர். மற்ற இயக்குனர்கள் நல்ல படம் எடுத்தால் கூட திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
அண்மையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே, மேடையில் நின்று கொண்டு, உடன் ஆடுவதற்கு நெல்சனை அழைத்துள்ளார். அப்போது மேடைக்கு வந்த நெல்சனிடம், தொகுப்பாளினி நீங்கள் வேறு யாரையாவது ஆடுவதற்கு மாட்டிவிடலாம் என்று கூறுகிறார்.
இதையும் படியுங்களேன் – இந்த ட்ரெஸ் தூக்குறதுக்கு 4 பேரு.! அலும்பு பண்ணும் சிவாங்கி.! அவரே வெளியிட்ட வைரல் வீடியோ….
உடனே, நெல்சன், ‘ ஏற்கனவே நான் மாட்டி கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நான் யாரையும் மாட்டிவிட விரும்பவில்லை,’ என கனத்த இதயத்துடன் தன்னை இணையத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருவதை மறைமுகமாக குறிப்பிட்டு கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. நிச்சயம் நெல்சன், ரஜினி திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்து தான் ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்பதை நிரூபிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவரது ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் சினிமா ரசிகர்களும் அப்படிபட்ட ஒரு கம்பேக் வெற்றிக்காக தான் காத்திருக்கின்றனர். விரைவில் நெல்சன் தலைவர் ரஜினிகாந்துடன் நல்ல திரைப்படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…