ரஜினி பட வாய்ப்பு கிடைச்சதே அவராலதான்...மனம் உருகிய நெல்சன்....

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும். நெல்சன் திலீப்குமாரும் அதில் ஒருவர். விஜய் டிவியில் பணிபுரிந்தவர் நெல்சன். சிம்புவை வைத்து இவர் பல வருடங்களுக்கு முன்பே இயக்கிய படம் கெட்டவன். ஆனால், பாதியில் இப்படம் நின்று போனது. எனவே, மீண்டும் விஜய் டிவிக்கு சென்று சில நிகழ்ச்சிகளை இயக்கினார்.
அதன்பின் சில வருடங்கள் கழித்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படம் எடுத்தார். படம் சூப்பர் ஹிட். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படம் எடுத்தார். அப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து மாஸ் ஹிட். அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

vijay-aniruth-nelson
அதோடு, கிரீடம் வைத்தது போல் ரஜினியின் அடுத்த படத்திற்கும் இயக்குனர் நெல்சன்தான். மிக குறுகிய காலத்தில் எந்த இயக்குனரும் இவ்வளவு வளர்ந்தது இல்லை. அதுவும் டாக்டர் - பீஸ்ட் - ரஜினி படம் என சர்ர்ரென அவரின் கிராப் உயர்ந்துவிட்டது.
இந்நிலையில், ரஜினி பட வாய்ப்பு பற்றி சமீபத்தில் பேட்டியளித்துள்ள நெல்சன் ‘பீஸ்ட் படம் படப்பிடிப்பில் இருந்த போது ‘ரஜினி சார் அடுத்த படத்திற்கு கதை கேட்கிறார். ஒரு கதை ரெடி பண்ணி அவர்கிட்ட சொல்லுங்க’ என விஜய்தான் என்னிடம் கூறினார். ரஜினி சார் பெரிய லெஜெட்ண்ட் அவருக்கு எப்படினு நான் தயங்கினேன். ஆனால், விஜய் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்.
நீங்க கதை ரெடி பண்ணி அவர்கிட்ட சொல்லுங்க.. பீஸ்ட் படம் முடியும் போது அவரோட படம் ஸ்டார்ட் பண்ண சரியா இருக்கும். உங்களுக்கு கண்டிப்பா நடக்கும்’ அப்படின்னு விஜய் என்கிட்ட சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அது நடந்துடுச்சு’ என உருகியுள்ளார் நெல்சன்.