சூடு கண்ட பூனையாக மாறிய நெல்சன் - விஜயை வச்சு பட்டதே போதும்! அலார்ட்டா இருக்காருய்யா

nel
இயக்குனர் நெல்சன் இந்த முறை கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுத்து ஆக வேண்டும் என்ற முனைப்பில் மிக தீவிரமாக இருக்கிறார். ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் எப்படியாவது இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் படத்தில் உள்ள அத்தனை சாட்டுகளையும் மிக கவனமாக எடுத்து வந்தாராம்.
சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வெற்றிகரமாக மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. விழாவில் பேசிய அனைவருமே நெல்சனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க : விஜய்க்கு எதிரா பாட்டெழுதி எல்லாம் போச்சு! அஜித்தால் வாழ்க்கையை தொலைத்த பிரபலம்..
அதற்குக் காரணம் இதற்கு முந்தைய படமான விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் எதிரொலி தான். அந்தப் படத்தால் நெல்சன் மனதளவில் மிகவும் நோகடிக்கப்பட்டார். அந்த அளவுக்கு ரசிகர்கள் நெல்சனை கழுவி கழுவி ஊற்றினார்கள்.
இதன் காரணமாக கூட ரஜினி இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கினார். அதன் பிறகு பல பேர் குறுக்கீட்டால் இந்த படம் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ரசிகர்களின் பேராதரவுடன் வரும் 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பிரமோஷனுக்காக சன் டிவியில் நெல்சன் விஜய் நடத்திய அந்த ஒரு நேர்காணலை போன்று இந்த தடவையும் ரஜினியை வைத்து ஒரு நேர்காணலை நடத்துவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
இதையும் படிங்க : ரத்னவேலு பொண்டாட்டி என்னயா பாவம் செஞ்சா?… புள்ளிங்கோ அட்ராசிட்டி!.. ரொம்ப ஓவரா போறீங்கடா!..
ஆனால் இதை முன்னதாகவே நெல்சன் முடிவெடுத்து விட்டாராம். நான் பேட்டி கொடுக்க மாட்டேன் என்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் வேண்டுமென்றால் பேட்டி கொடுப்பார்கள் என்றும் கூறிவிட்டாராம். பீஸ்ட் படத்தின் அந்த நேர்காணலில் நெல்சன் மிகவும் ஓவராக பேசி இருப்பார். அந்த ஒரு முறை பட்டதை போதும் என நினைத்ததனால் தான் இந்த தடவை வாலை சுருட்டிக் கொண்டு இருப்போம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்.