சூப்பர்ஸ்டார் ரெடியோ? ஜெயிலர் 2 குறித்த சூப்பர் அப்டேட்.. இயக்குனரே சொன்ன ஆச்சரிய தகவல்…
Jailer2: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஷயத்தினை உடைத்து இருக்கிறார்.
தளபதி விஜய் வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது வெளியான திரைப்படம் பீஸ்ட். திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை குறித்தது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மிகப்பெரிய அளவில் கேலிக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதையும் படிங்க: முதல் நாளே விஜய் என்கிட்ட ஸ்டிரிக்டா சொன்னது! ‘கோட்’ பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
இதைத்தொடர்ந்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என வதந்திகள் பரவியது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்ட ஒரு இயக்குனரை வெளியேற்றக்கூடாது எனக் கூறி நெல்சனுக்கு வாய்ப்பு அளித்தார்.
தன்மீது தயாரிப்பு நிறுவனமும், சூப்பர் ஸ்டார் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என அவர் கொடுத்த உழைப்பு ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீசில் அப்பட்டமாக தெரிந்தது. சூப்பர் ஸ்டாரின் சினிமா கேரியரை மிகப்பெரிய உச்சத்தில் உயர்த்தியது.
அப்படத்தில் வித்தியாசமான கதை இல்லை என்றாலும் திரைக்கதையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையை மீண்டும் சுறுசுறுப்பாக தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தான் ரஜினி காந்த் நடிப்பில் மீண்டும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்தது.
இதையும் படிங்க: நல்ல கதையை ஓவர் ஆசையில் கெடுத்தது அந்த ஒரே ஹீரோதான்… வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்…
இப்படத்திற்கு ஹுக்கும் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும், முதல் பாகத்தில் காட்டப்பட்டிருந்த போலீஸ் கேரக்டரின் முழு நீள படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நெல்சனிடம் கேள்வி எழுப்பியபோது, எல்லாம் முடிந்தது இன்னும் ஒரு மாதத்தில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவித்திருக்கிறார்.