
Cinema News
தளபதி விஜய்க்கே டஃப் கொடுக்கும் உதயநிதி.! வெளியானது வேற லெவல் வீடியோ..,
தமிழகத்தில் தற்போது குட்டி கதை என்று கூறினாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உடனடியாக ஞாபகம் வரும் நபர் என்றால் அது தளபதி விஜய் தான். அது சமீப வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
சமீபகாலங்களில் விஜயின் திரைப்படங்களுக்கு இசை வெளியீடு விழா ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழாவிற்கு ஏராளாமான, ரசிகர்கள் கலந்துகொள்வர். அப்போது விஜய் தனக்கே உரித்த பாணியில் குட்டி கதை கூறுவார்.
அப்படி ஒரு குட்டி கதையை அண்மையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அது வேறு எந்த மேடையிலும் இல்லை, அது அவர் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தான். இந்த படத்தில் இருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி வெளியானது. அதில், உதயநிதி ஒரு குட்டி கதை கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – உதயநிதி ஸ்டாலின் அந்த விஷயத்தில் பலே திறமைசாலி.! சர்டிபிகேட் கொடுத்த சர்ச்சை நடிகர்.!
அந்த கதை யாதெனில், ‘ ஒரு ராஜா அனாதை ஆசிரமம் நடத்துகிறார். கிராம மக்களிடம் அங்கு இருப்பவர்களுக்காக பால் கேட்கிறார். அவர்களை தொட்டியில் பால் ஊற்ற சொல்லி கேட்கிறார். மக்களில் ஒருவன், தான் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என அந்த பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டு செல்கிறான்.
இறுதியாக ராஜா வந்து பார்க்கையில் அந்த பாத்திரம் முழுவதும் தண்ணீர் தான் இருந்ததாம். நாம் ஒவ்வொருவரும் இதையே தான் செய்து வருகிறோம்.’ என கதை கூறி இருந்தார் உதயநிதி. இதனை பார்த்ததும் , தளபதி விஜய்க்கு போட்டியாக உதயநிதி கதை கூறியுள்ளார் என்று இணையவாசிகள் பேச ஆரம்பித்து விட்டனர்.