Nepolean: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமான நெப்போலியன் முதல் படத்திலேயே வில்லனாக நடித்தார். அதுவும் 60வயது மதிக்கத்தக்க பெரியவர் கேரக்டரில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார். அப்போது அவருக்கு வயது வெறும் 22 தான். சிறு வயதில் அதிக வயதுடைய கதாபாத்திரத்தில் அதிகமான படங்களில் நடித்தவரும் நெப்போலியனாகத்தான் இருக்க முடியும்.
மகன் திருமணம்: சமீபத்தில் நெப்போலியன் மூத்த மகனான தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் கலா, குஷ்பூ, மீனா, ராதிகா, சரத்குமார் என ஒரு குரூப்பே சென்றிருந்தனர். பொதுவாக தங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று மறு நாளே ஊருக்கு அனுப்பி வைப்பதுதான் வழக்கம்.
இதையும் படிங்க: sathayaraj: சிங்கிள் பேரண்டாக சத்யராஜ் படும் அவஸ்தை.. மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா?
ஆனால் நெப்போலியன் இவர்களுக்காக மூன்று நாள்கள் ஜப்பானில் டிரிப் ஏற்பாடு செய்தும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் திருமண செலவுகள் பற்றி சமீபத்தில் நெப்போலியன் கூறியிருக்கிறார். இந்தியாவை விட அமெரிக்காவில் இரட்டை மடங்கு செலவாகுமாம். அமெரிக்காவை விட ஜப்பானில் நான்கு மடங்கு செலவாகுமாம். அப்படித்தான் தன் மகன் திருமணத்திற்கும் ஆனது. ஆனால் எல்லாம் தனுஷுக்காகத்தான் என நெப்போலியன் மற்றும் அவரது மனைவி கூறினார்.
உலகத்திலேயே பெரிய தொகுதி: மகனுக்காக சினிமாவையும் விட்டு அரசியலையும் விட்டு நீங்க எடுத்த முடிவு சரிதானு நினைக்கிறீங்களா என நெப்போலியனிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நெப்போலியன் 16 வயதிலேயே அரசியலுக்கு வந்துட்டேன். படங்களில் நடிச்சு எனக்கான இடத்தையும் பிடிச்சுட்டேன். எம்பியாக , இந்தியாவின் மந்திரியாக உலகத்திலேயே பெரிய தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று விட்டேன்.
இதையும் படிங்க: Vijay: ரசிகன் படத்தோட அந்தக் குளியலறைக் காட்சி… எங்கேருந்து சுட்டாங்கன்னு தெரியுமா?

ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதனாகவும் மக்களுக்கு சேவை செஞ்சுட்டேன். இப்படி என் குடும்பத்தை கவனிக்காம ஒரு கட்டத்துல ஓடிக்கிட்டே இருந்துட்டேன். இப்போ அதுக்கான நேரம் வந்துருக்கு. என் மகன், குடும்பம், மனைவி என அவங்களுக்காக என் வாழ்க்கையை செலவழிக்கலாம்னுதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன் என நெப்போலியன் கூறினார்.
