நெப்போலியன் நினைச்சிருந்தா நடிச்சிருக்க முடியும்!.. பொன்னியின் செல்வனில் ஏன் வாய்ப்பு பறிபோனது?..
தமிழ் சினிமாவில் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தை பெரிதும் அதிகப்படுத்திய படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்தது. வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியிலு சரி இலக்கியவாதிகள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எம்ஜிஆர் முதல் எடுக்க ஆசைப்பட்ட இந்த நாவலை மணிரத்னம் தன் அழகான படைப்புகளால் பொக்கிஷமாகவே கொடுத்திருந்தார். ஏஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அமைந்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் படத்தில் அமைந்த கதாபாத்திரங்கள் கூடுதல் சிறப்பு.
இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்ட நடிகர் யார் தெரியுமா?
அவரவர் கதாபாத்திரங்களை திறம்பட செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் 90களில் தன் கம்பீரமான தோற்றத்தாலும் வீரவசனத்தாலும் அனைவரையும் சுருள வைத்தவர் நடிகர் நெப்போலியன். பொன்னியின் செல்வன் படத்தில் நெப்போலியன் நடித்திருந்தால் இன்னும் கூடுதல் பலமாக இருந்திருக்கும் என அவரது நெருங்கிய சுற்றங்கள் தன்னிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் நெப்போலியன் கூறியிருந்தார்.
அதுவும் சரத்குமார் ஏற்று நடித்திருந்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்று பல ஊடகங்கள் நெருங்கிய உறவினர்கள் தன்னிடம் கேட்டதாக கூறியிருந்தார். மேலும் அந்தப் படத்தை பார்த்த பிறகு தான் எனக்கே அந்த எண்ணம் தோன்றியது , ச்ச்ச அந்த படத்தில் நாம் நடிக்காமல் போய்விட்டோமே? என்று தோன்றியது என்றும் கூறியிருந்தார்.
மேலும் நெப்போலியன் அவர் மகன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கின்றார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் ஒரு வேளை இந்தியாவில் இருந்திருந்தால் கண்டிப்பாக மணிரத்னம் அழைத்திருந்திருப்பார் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.