Nepoleon and dhanush
நடிகர் நெப்போலியன் சமீபத்தில் அவரது மகன் தனுஷூக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக 150 கோடியில் திருமணம் செய்து வைத்தார். தனுஷ் தசைச்சிதைவால் பாதிக்கப்பட்டவர். இதனால் சமூக வலைதளங்களில் ரொம்பவே விமர்சனத்துக்கு உள்ளானார்
பொம்மைக் கல்யாணம்
நெப்போலியன். இவ்வளவு கோடியில திருமணம் தேவையா? இந்த மாப்பிள்ளையால என்ன செய்ய முடியும்? இது வெறும் பொம்மைக் கல்யாணம் தான் என்று எல்லாம் சொன்னார்கள்.
கமெண்ட் போடுறவனுக்கு…
Also read: துப்பாக்கி கொடுத்துட்டா நீங்க அடுத்த விஜயா?.. அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!…
அந்த வகையில் நெப்போலியன் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டார். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கமெண்ட் போடுறவனுக்கு எல்லாம் என்ன தெரியும் என்றும் சொன்னார். அதே நேரம் அவர் சிறந்த தந்தை, மனிதாபிமானம் மிக்கவர் என்றும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் தனுஷ் எப்படிப் பிறந்தான்? அவன் எங்களுக்கு எந்த வகையில் முக்கியமானவன் என்றெல்லாம் இப்போது நெப்போலியன் தெரிவித்துள்ளார். இது நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. என்ன சொல்றாருன்னு பாருங்க.
3 முறை அபார்ஷன்
கல்யாணத்துக்கு அப்புறம் நான் போன எல்லா சூட்டிங்குக்கும் என் மனைவியையும் கூட்டிட்டுப் போவேன். ட்ராவல் பண்ணிக்கிட்டே இருந்ததால 3 முறை அபார்ஷன் ஆகிடுச்சு. 4வது முறை கர்ப்பமாகி எங்கயும் போகாம கல்யாணம் ஆகி 5வது வருஷத்துல பிறந்த குழந்தை தான் தனுஷ். அதனால எங்களுக்கு அவன் ஒரு பொக்கிஷமான குழந்தை என்கிறார் நெப்போலியன்.
அமெரிக்காவில் திருமணம்
அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் அங்கு திருமணம் நடத்த முடியாது என்பதால் தனது மகனின் விருப்பப்படி ஜப்பானில் நடத்தினாராம். இதுவே அமெரிக்காவில் நடத்தி இருந்தால் இன்னும் நாலு மடங்கு அதிகமாக செலவாகி இருக்குமாம்.
Also read: Kanguva: ‘கங்குவா’ டிரெய்லரில் கடைசி சீன் நோட் பண்ணீங்களா? தயாரிப்பாளரின் பேராசையால் மாறிய கதை
என்றாலும் இன்னும் 6 மாதம் கழித்து அமெரிகாவிலும் அந்த நாட்டு முறைப்படி திருமணம் நடக்கும் என்றும் நெப்போலியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…