Nepoleon: எங்கேயோ ஒரு மூலைல உட்கார்ந்து கமெண்ட் போடுற உனக்கு என்ன தெரியும்? நெப்போலியன் ஆவேசம்!

Nepoleon
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகன் தனுஷூக்கு ஜப்பானில் 150 கோடி செலவு செய்து திருமணம் செய்து அழகு பார்த்தார் நடிகர் நெப்போலியன். இந்த திருமணத்தில் நடிகை சுகாசினி, மீனா உள்பட பல பிரபலங்களும் வந்து வாழ்த்தினர். 2 மாதங்கள் ஜப்பானில் தங்கி இருந்து விட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து அந்நாட்டு முறைப்படி திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.
பொம்மை திருமணம்
Also read: Nepoleon: அவனோட கனவு எங்களுக்கு முக்கியம்!… மருமகள் சொன்ன அந்த வார்த்தை!… எமோஷனலான நெப்போலியன்..!
இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பொம்மைக்கு திருமணம் செய்து வைப்பதும் நெப்போலியன் மகன் தனுஷூக்கு திருமணம் செய்து வைப்பதும் ஒன்று தான் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அதே நேரம் நெப்போலியன் ஒரு பொறுப்புள்ள தந்தை, மிகச்சிறந்தவர் என்றெல்லாம் அவருக்கும் பாராட்டுகளும் வந்து குவிந்தன.
இன்னிக்கி உலகம் எல்லாம் என்னை சிறந்த தந்தைன்னு சொல்றாங்க. ஆனா நான் அதை எதிர்பார்க்கல. நான் என் புள்ளைக்கு செய்ற கடமையைத் தான் செஞ்சேன். அதே நேரத்துல சிலர் எதுக்கு உங்க பையனுக்கு கல்யாணம் பண்றீங்க?
என்ன பண்ண முடியும்?

nepoleon dhanush
உங்க பையனால என்ன பண்ண முடியும்? அப்படின்னு எல்லாம் தப்பா கமெண்ட் பண்றாங்க. என் புள்ளையைப் பத்தி எனக்குத் தான் தெரியும். எங்கேயோ ஒரு கோடில ஒக்கார்ந்துகிட்டு கமெண்ட் போட்ற உனக்கு என்ன தெரியும்னு ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளார் நெப்போலியன்.
அமெரிக்காவை விட ஜப்பானில் திருமணம் செய்ததற்கு 4 மடங்கு செலவு அதிகமாம். எல்லாம் மகனின் விருப்பம் தான். அவனுக்காக எதை வேண்டும் ஆனாலும் செய்வேன். சினிமா, அரசியலை விட எனக்கு மகன் தான் முக்கியம் என்றும் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
மருமகள் அக்ஷயா
Also read: Nepoleon: ஆறு மாதம் கழித்து தனுஷுக்கு ‘மீண்டும்’ திருமணம்?
இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா நெப்போலியன் மருமகள் அக்ஷயாவிடம் 'உனக்கு சம்மதமா? கட்டாயத்தின்பேரில் ஒப்புக்கொண்டாயா...?' என்றெல்லாம் கேட்கப்பட்டதாம். அதற்கு அவர் 'என்னை யாருமே வற்புறுத்தல.
எனக்குப் பிடிச்சித் தான் திருமணம் செய்ய சம்மதிச்சிருக்கேன்'னும் தெரிவித்தாராம். 'இப்படிப்பட்ட மருமகள் அமைஞ்சது எங்களுக்குப் பாக்கியம்' என்று நெப்போலியனும், அவரது மனைவி சுதாவும் தெரிவித்தார்களாம்.