Sushant singh: தோனி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். அவர் போலவே தெலுங்கிலும் வளர்ந்து வந்த நடிகர் தற்கொலை விவகாரம் குறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.
வட இந்தியாவின் மூலையிலிருந்து இந்தி சின்னத்திரைக்கு நடிக்க வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென பாலிவுட்டில் மிகப்பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடிக்கிறார்.
இதையும் படிங்க: குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..
கிட்டத்தட்ட ரசிகர்கள் அவரை ரீல் தோனியாகவே அங்கீகாரம் கொடுக்கும் அளவுக்கு தன் நடிப்புத் திறனை காட்ட பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அம்பானி வீட்டு விழாவில் மற்ற பிரபலங்களுக்கு நடுவே அவருக்கு முதல் அங்கீகாரம் கிடைக்கிறது. இதனால் கடுப்பான பாலிவுட் இன் நெப்போடிசம் கேங் அவரை குறி வைத்ததாக கூறப்படுகிறது. திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தகவல் வெளியானது.
இன்னமும் அதில் இருக்கும் மர்மம் மட்டும் விலகவே இல்லை. பாலிவுட்டை ஆட்சி செய்து வரும் கான் மற்றும் கபூர் ஃபேமிலிகளை இதற்கு காரணம் எனவும் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஹிந்தியில் மட்டுமல்ல தெலுங்கில் கூட இப்படி ஒரு மிகப்பெரிய சர்ச்சையான நிகழ்வு நடந்திருக்கிறது. சித்திரம் படத்தின் மூலம் தெலுங்கில் நடிகராக எண்ட்ரி கொடுக்கிறார் உதய் கிரண். இவர் எந்தவித சினிமா பின்புலனும் இல்லாமல் நடிக்க வந்தவர்.
முதல் சில படங்களிலே மிகப்பெரிய வெற்றியை கொடுக்க உச்சத்துக்கு செல்கிறார். தெலுங்கு சினிமா எப்போதுமே சிரஞ்சீவி குடும்பம், நாகார்ஜூனா, வெங்கடேஷ் குடும்பம், என்டிஆர் மற்றும் தில் ராஜூ ஆகிய நான்கு குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
இதையும் படிங்க: கடவுளுக்கு நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்..! வைரலான வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்
இதனால் தனியாக உயர்ந்து வந்த உதய்கிரணை தங்களுடன் இணைக்க முடிவெடுக்கின்றனர். சீரஞ்சிவியின் மகளுக்கும் இவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனால் உதய்கிரண் இந்த சதியை தெரிந்து கொண்டு நிச்சயத்தார்த்தத்துடன் அதை முறித்து கொள்கிறார்.
நால்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெலுங்கு சினிமா உதய்கிரணை ஒதுக்கியது. நடித்த எல்லா படங்களுமே ப்ளாப் தான். அவர் 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருக்க அத்தனை தயாரிப்பாளர்களும் வீட்டின் முன்னர் வந்து காசை திருப்பிக் கேட்டனராம். அதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். உதய்கிரண் பொய் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…