
Cinema News
நெல்சனின் எல்லா படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தானாம்..! தீயாய் பரவும் தகவல்..
இரண்டு அடுத்தடுத்த வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான டாக்டர் படம் இரண்டுமே நெல்சனின் வெற்றிப் படைப்புகளாகும்.
அடுத்து இவர் தயாரிக்கும் பீஸ்ட் படத்தை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு முன் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் பீஸ்ட் மூடில் சுற்றி கொண்டிருக்கின்றனர்.
இவர் தயாரித்த மூன்று படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் கொடுத்தது.இந்த நிலைமையில் இவரின் முன் இரண்டு படங்களையும் நெல்சன் முதன்முதலில் அனிருத்திற்கு தான் போட்டு காண்பித்தாராம்.
அவரின் ரிவ்யூ படி படங்கள் ஹிட் அடித்ததால் பீஸ்ட் படத்தையும் முதலில் அனிருத்திற்கு தான் போட்டு காண்பித்துள்ளார். அவர் படத்தை பார்த்து வேற லெவெல் என்று கூறியுள்ளார்.
ஆதலால் படம் பின்னி பெடலெடுக்கப் போகுது என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.