Cinema News
சத்தமே இல்லாம பட்டையை கிளப்பிய குட் பேட் அக்லி… இதுலயும் விடாமுயற்சிய மிஞ்சிட்டங்களே?!..
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் netflix ஓடிடியில் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகின்றார்.
இதையும் படிங்க: உருட்டுனா இப்படிதான்… டிஆர்பியில் செம அடி வாங்கிய விஜய்… சீன் காட்டும் சன்டிவி
மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பாடு இல்லை. இப்படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது.
இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார். இந்த திரைப்படத்தை மிகவும் விறுவிறுப்பாக எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். விடாமுயற்சிக்கு பிறகு தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம் முழுவதுமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இது திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது.
முதலில் விடாமுயற்சி திரைப்படம் தான் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும், அதன் பிறகு குட் பேட் அக்லி திரைப்படம் மே 1-ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று கூறி வந்தார்கள். ஆனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தால் முதலில் குட் பேட் அக்லி திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு முன்பு தற்போது வசூலை வாரி குவித்து வருகின்றது. இரண்டு திரைப்படங்களின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கின்றது. அதன்படி விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை 75 கோடிக்கும், குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 95 கோடிக்கும் இந்த நிறுவனம் வாங்கியிருக்கின்றது.
இதையும் படிங்க: திருப்பூர் சுப்ரமணியத்தை பார்ட் பார்டாக போட்டு கிழித்த ப்ளூ சட்டை?!… ரவுண்டு கட்டி அடிக்கிறாரே!…
இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே நல்ல வசூல் செய்ய தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இதில் கூட குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் விடாமுயற்சி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை விட அதிகம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.