அட எல்லாம் பொய்யா?!...விக்கி - நயன் திருமண வீடியோ!..வெளியான மாஸ் அப்டேட்...

by சிவா |
netflix
X

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால், இது தொடர்பான புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ எதுவும் வெளியாகவில்லை.

nayan1

nayan1

அதற்கு காரணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துடன் விக்கி - நயன் செய்து கொண்ட ஒப்பந்தம்தான். அதாவது, திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மட்டுமே வெளியிடும். இதற்காக ரூ.25 கோடி நயன் - விக்கி தம்பதிக்கு கொடுக்கப்படும். திருமணம் தொடர்பான எந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் விக்கி - நயன் ஜோடி வெளியிடக்கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டது. நயன், விக்கி திருமண நிகழ்வை இயக்குனர் கவுதம் மேனன் படம் பிடித்தார்.

ஆனால், இதுவரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வீடியோ பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டதால், ஒப்பந்தத்தை மீறியதாக கூறி, நயன் திருமண வீடியோவை வெளியிட மறுத்ததோடு, தாங்கள் கொடுத்த ரூ.25 கோடியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் திருப்பி கேட்பதாக கூறி கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நயன், விக்கி ரொமாண்டிக்காக போஸ் கொடுக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, இவர்கள் இருவரும் விரைவில் நெட்பிளிக்ஸ்க்கு வரவுள்ளனர் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story