நீங்களே இப்படி வச்சி செய்றீங்களே.?! முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்...

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இப்படத்தின் டிரைலர் கொடுத்த தாக்கத்தை படம் முழுதாக திருப்தி படுத்தவில்லை என்றே கூற வேண்டும். அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு அடுத்து பீஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.

அதில் வெளியானதால் பிரமோஷன் என்கிற பெயரில் அவர்களே படத்தை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். பீஸ்ட் பாவங்கள், அரபிக் குத்து பரிதாபங்கள் என அவர்களே வீடியோ செய்து ப்ரமோஷன் என்கிற பெயரில் வெளியிட்டு வந்தனர். இதனை ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து இணையத்தில் பேசி வந்தனர்.

தற்போது அதே போல் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படம் நெட்ப்ளீக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா டிவிட்டர் தளம் ஈடுபட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் - எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க… பாலாவிடம் வாய்ப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி..

இதில் நேற்று தனுஷ் இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதில் தி க்ரே மேன் பரம்பரையில் தனுஷ் என பதிவிட்டு இருந்தார்கள். ஏற்கனவே நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சென்று விட்டது. அதில் தான் 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' என வசனம் வரும். அதனை மீண்டும் உபயோகித்து இப்படி செய்திருக்கிறார்களே என்று நெட்டிசன்கள், நீங்களே கலாய்த்து கொண்டால் எப்படி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it