நயன் - விக்கி திருமண வீடியோ...! இது சும்மா டிரெய்லரு...! நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட 2 நிமிட காட்சிகள்....
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் அன்புக்கினிய இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டிருந்தன என்பதும் நாம் அறிந்தது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் முதல் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் இவர்கள் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். மேலும் புரோகிதர்கள் முன்னிலையில் கட்டிமேளத்துடன் திருமணம் நடைபெற இவர்கள் திருமணத்திற்கு புகைப்படங்கள் எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
ஏனெனில் திருமண வீடியோ வெளியிடும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இந்த வீடியோவை கூடிய சீக்கிரம் தனது ஓடிடி தளத்தில் வெளியிடவும் தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் திருமண வீடியோவின் டிரெய்லர் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டதை பற்றி பேசியுள்ளனர். மேலும் முழு வீடியோவை கூடிய சீக்கிரம் வெளியிடுவார்கள் என தெரிகிறது.
இதோ அந்த வீடியோ : https://twitter.com/Netflix_INSouth/status/1556877022592258048?s=20&t=SNfefHT_Rnd86MJ8bmUO7g