ஓசில கல்யாணம் பண்ணா இப்படிதான் ஆகும்... சிக்கலில் நயன் - விக்கி ஜோடி!
கோலிவுட் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வந்துக்கொண்டிருந்தவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன். மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் நயன்தாரா கோலிவுட்டில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் இருந்தே காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். அண்மையில் மிகப்பெரும் பொருட்செலவில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.
இவர்களது திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர். இதனால் பல கோடி வருமானம் ஈட்டப்போகிறோம் என கனவுக்கண்டிருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதன் காரணமாக இவர்களது ஆடம்பர திருமண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது.
இதையும் படியுங்கள்: பாலில் விழுந்த பலாப்பழம் மாதிரி இருக்க!…பளிச் அழகை பக்காவா காட்டும் பூனம் பாஜ்வா….
ஆனால், ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் நயன் - விக்கி ஜோடிக்கு நெட்பிளிக்ஸ் ஆப்பு வைத்துள்ளது. ஆம், இவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், திருமணம் செய்து வைத்த செலவுக்கான தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்து கெடுபிடி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.