STR50: தனுஷ், சிவகார்த்திகேயன் போல ஒரு படம் முடிந்தால் அடுத்த படம் என சிம்பு இருப்பதே இல்லை. 3 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ஹிட் படம் கொடுப்பார். இடையில் 2 படங்கள் ஃபிளாப் கொடுப்பார். அதன்பின் காணாமல் போய்விடுவார். சிம்புவுக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சிம்பு இப்படியிருந்தும் அவரின் மீதுள்ள அன்பு குறையாத ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், சிம்பு அவர்களுக்காக யோசிப்பதே இல்லை.
பத்து தல படம் வெளியான பின் வெளிநாட்டுக்கு போய்விட்டார். மாதக்கணக்கில் அங்கேயே இருந்தார். அதன்பின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஒரு சரித்திர படம் அறிவிக்கப்பட்டது. இது சிம்புவின் 50வது படம் என சொல்லப்பட்டது. அந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகம் என செய்திகள் வெளியானது.
ஆனால், ஓடிடி நிறுவனங்கள் புது படங்களுக்கு கொடுக்கும் விலையை குறைத்துவிட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின்வாங்கியது. அதன்பின் வேறு தயாரிப்பாளரை தேடி அலைந்தார் சிம்பு. அதேநேரம், ராஜ்கமல் நிறுவனத்திற்காக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவான தக்லைப் படத்தில் நடித்து கொடுத்தார் சிம்பு.

50வது படத்திற்காக துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி என பலரிடமும் முயற்சி செய்த சிம்பு. ஒரு கட்டத்தில் தானே இப்படத்தை தயாரிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அதேநேரம், ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தில் முதலீடு செய்ய ஒப்புகொண்டது. சிம்புவின் பேனரில் இந்நிறுவனம் முதலீடு செய்கிறது என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், 10 நாட்கள்கள் டெஸ்ட் ஷுட் செய்து அதை எடிட் செய்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் போட்டு காட்டப்போகிறார்களாம். அதை பார்த்து பிடித்து அப்படத்தை வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்புகொண்டால் படத்தை தொடர்ந்து எடுப்போம். இல்லையெனில் படத்தை டிராப் செய்துவிடுவோம் என முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், சிம்புவின் 49வது படத்தை பார்கிங் பட இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்களில் துவங்கவுள்ளது. அதேபோல், சிம்புவின் 51வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இடையில் சிம்பு 50 டேக் ஆப் ஆகுமா என்பது நெட்பிளிக்ஸின் கையில் இருக்கிறது.