More
Categories: latest news television news

சின்னத்திரை பிரபல நடிகருக்கு கேன்சர் பாஸிட்டிவ்… மகள் சொல்லிய தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

பிரபல நடிகர் நேத்ரனுக்கு கேன்சர் பாஸிட்டிவ் என அவர் மகளும், நடிகையுமான அபிநயா வெளியிட்டு இருக்கும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

சின்னத்திரையில் பிரபல வில்லன் நடிகராக இருந்தவர் நேத்ரன். இவர் ரியாலிட்டி ஷோ மற்றும் நிறைய சீரியல்களில் நடித்தும் இருக்கிறார். நேத்ரனின் மனைவி தீபாவும் நடிகையாக இருக்கிறார். இவருக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். 

Advertising
Advertising

பிரபல பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் நேத்ரன் தன்னுடைய மகள் அபிநயாவுடன் கலந்துக்கொண்டார். அப்போதில் இருந்தே அபிநயா பிரபலமானார். சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலில் அபிநயாவும் நடித்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் அபிநயா ஆக்டிவாக இருப்பவர்.

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அபிநயா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது அதிர்ச்சியாகி இருக்கிறது. அதில், என்னுடைய அப்பா நேத்ரனுக்கு கேன்சர் பாஸிட்டிவ். ஆனால் அது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது. இருந்தும் தற்போது அவர் ஐசியூவில் இருக்கிறார். சில நாட்களாகவே உடல்நிலை மோசமாக உள்ளது.

முதலில் இதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதா? வேண்டாமா என்ற சந்தேகமே இருந்தது. நோய் குறித்து பதிவிடுவதால் நான் விமர்சிக்கப்படுவேனோ என நினைத்தேன். இருந்தும் என்னுடைய எண்ணத்தினை புறந்தள்ளிவிட்டு இதை இன்ஸ்டாவில் சொல்கிறேன்.

வீடியோவைக் காண: https://www.instagram.com/p/C9pEj0-Sk2m/

என்னுடைய தந்தை குணமாவதற்காக எல்லாரும் வேண்டிக்கொள்ள வேண்டும். உங்களின் வேண்டிதலுக்காகவே இதை பதிவிடுகிறேன். அவர் மீண்டும் குணமாகி முன்பை விட வலுவாக வரவேண்டும் என நம்புகிறேன். அவருக்காக எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொள்வேன். ஆனால் எதையும் விட்டுக்கொடுத்தது இல்லை. ஒருபோதும் கைவிட மாட்டேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan

Recent Posts