பேரனுக்கு பாட்டிய விட வயசு அதிகம்!... ட்ரோல் ஆகும் அண்ணாத்த நடிகை...

by சிவா |
leela
X

நடிகர் ரஜினிக்கு கடைசியாக வெளியான பேட்ட, தர்பார் என 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. பேட்ட படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அப்படத்திற்கு போட்டியாக வெளியான விஸ்வாசம் படம் பேட்டை படத்தின் வசூலை பாதித்தது. தர்பார் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

எனவே, எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என சிவாவுடன் கை கோர்த்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் தீவிர ரஜினி ரசிகர்களையே கவரவில்லை என ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. போட்டிக்கு பெரிதாக படங்கள் இல்லாத நிலையில் அண்ணாத்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.

annaatthe

இப்படத்தில் ரஜினியின் அப்பத்தா அதாவது ரஜினியின் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே மருது படத்தில் விஷாலின் பாட்டியாக நடித்தவர். இவருக்கு தற்போது 67 வயது ஆகிறது. ஆனால், ரஜினிக்கு வயது 70 ஆகும்.

actress

எனவே, இதை கையில் எடுத்த நெட்டிசன்கள் சில பேர் ‘பேரனுக்கு பாட்டிய விட வயசு அதிகம்’ என ரஜினியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Next Story