புஷ்பா 2 படத்தோட நீளம் எவ்வளவு தெரியுமா?!. சோலி முடிஞ்ச்!. வைரலாகும் மீம்ஸ்கள்!…

Published on: November 26, 2024
pushpa2
---Advertisement---

Pushpa 2: தெலுங்கில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக புரமோட் செய்து கொண்டவர். இவரின் படங்களில் சண்டை காட்சிகளில் அனல் பறக்கும்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து 2021ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புஷ்பா. ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது. செம்மரக்கட்டை கடத்தலுக்கு பின் இருக்கும் கும்பல், அவர்களை பிடிக்க போலீசார் செய்யும் முயற்சிகள், இந்த வியாபாரத்திற்கு பின்னால் இருக்கும் வியாபாரிகள், மற்றும் அதில் உள்ள அரசியல் ஆகியவற்றை வைத்து ஒரு சுவாரஸ்யமான கதையை உருவாக்கி இருந்தார் சுகுமார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ரிலீஸில் ஏற்பட்ட குழப்பம்!.. நீங்க வரலன்னா என்ன நாங்க வரோம்?!.. ரெடியா இருக்காங்களே!..

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக டோலிவுட் குயின் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை அள்ளியது. எனவே, கடந்த 2 வருடங்களாக இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கி வந்தனர்.

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் ஒருவழியாக வருகிற டிசம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இப்படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் அல்லு அர்ஜூன் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் கூட சென்னை வந்து ரசிகர்கள் முன் நெகிழ்ச்சியோடு பேசினார்.

pushpa2
#image_title

புரமோஷனுக்காக வெளிநாடு முதல் பல மாநிலங்களுக்கு நான் சென்றிருந்தாலும் சென்னை எப்போது எனது ஸ்பெஷல். ஏனெனில் நான் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்தான். 20 வயது வரை இங்குதான் இருந்தேன். எனவே, தமிழ் நன்றாக பேசுவேன் என தமிழிலேயே பேசினார்.

இந்நிலையில், புஷ்பா படத்தின் நீளம் 3 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. இரண்டரை மணி நேரத்திற்கு போனால் ரசிகர்களால் உட்கார முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், புஷ்பா 2-வுக்கு ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை தியேட்டரில் ரசிகர்களை கட்டிப்போடும் என படக்குழு கருதுகிறது. ஒருபக்கம், புஷ்பா 2 படத்தின் நீளம் தொடர்பான மீம்ஸ்களும் வெளியாகி வருகிறது.

pushpa2
#image_title

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.