விக்ரம் செய்யாதத சூர்யா பண்ணிட்டாரா!?.. சிவக்குமாரை வெளுக்கும் நெட்டிசன்கள்!…

by சிவா |   ( Updated:2025-04-20 20:52:40  )
surya
X

Retro Surya: கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். வருகிற மே 1ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. சூர்யாவின் கங்குவா படம் சரியாக போகாத நிலையில் இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவக்குமார் மகன் சூர்யாவை பெருமைப்படுத்தும் விதமாக பேச நினைத்து ‘சினிமாவில் சூர்யாதான் முதன் முதலில் உடம்பை வறுத்தி சிக்ஸ் பேக் வைத்தான். அவனுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி எவன் வச்சான்?’ என கேட்டார்.

இதுதான் ட்ரோலில் சிக்கியது. சூர்யா வாரணம் ஆயிரம் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த அதே வருடத்தில்தான் பொல்லாதவன் படத்திற்காக தனுஷும், சத்யம் படத்திற்காக விஷாலும் சிக்ஸ் பேக் வைத்தார்கள். சூர்யாவுக்கு பின்னாலும் அருண் விஜய், சூரி, ஆதி போன்ற சில நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். ஐ படத்தில் கூட சியான் விக்ரம் சிக்ஸ் பேக் வைத்திருந்தார்.

surya

எனவே, சமூகவலைத்தளங்களில் பலரும் இந்த தகவல்களை பகிர்ந்து பலரும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். சிவக்குமார் தெரியாமல் பேசியிருக்கிறார் என அவரை திட்ட துவங்கிவிட்டனர். அதிலும், சூர்யா மீது எப்போது வன்மத்தை கக்காலம் என எப்போதும் காத்திருக்கும் ஒரு குரூப் இந்த விஷயத்தை கையில் எடுத்து இப்போதே ரெட்ரோ படத்திற்கு எதிராக டிவிட் போட துவங்கிவிட்டனர்.

சிலரோ ‘ஒரே படத்தில் கட்டுமஸ்தமான உடலும், உடல் மெலிந்த உருவமும் கொண்டு வந்த விக்ரமை விட சூர்யா என்ன உடலை வருத்தி நடித்துவிட்டார் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். சூர்யாவுக்கு முன்பே தில் படத்திற்காக விக்ரம் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

சிவக்குமார் குடும்பத்தை பொறுத்தவரை அவர் என்ன பேசினாலும் சரி, அதேபோல், ஜோதிகா, கார்த்தி என யார் என்ன பேசினாலும் அது சூர்யாவிடமே வந்து முடியும். கடந்த பல வருடங்களாகவே இப்படி வன்மத்தை பலரும் சூர்யா மீது கக்கி வருகிறார்கள். அவரின் கங்குவா படத்தை முழுக்க முழுக்க வன்மத்தாலேயே காலி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story