இந்த சரக்கு ட்ரை பண்ணுங்க...போஸ் கொடுத்த நடிகை...திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்....
குடிப்பழக்கம் என்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. அதுவும் சினிமா மற்றும் மாடலிங் துறைகளில் பார்ட்டி என்றாலே அதில் மது கண்டிப்பாக இடம் பெறுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும் மது அருந்துகிறார்கள். பல நடிகைகளுக்கும் மது அருந்தும் பழக்கமிருக்கிறது.
ஒருபக்கம், நடிகைகள் மதுபான விளம்பரங்களில் நடிப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு வந்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.காசை வாங்கி போட்டுக்கொண்டு குறிப்பிட்ட மதுபானத்தை கையில் வைத்து விளம்பரத்திற்காக போஸ் கொடுப்பார்கள்.சமீபகாலமாக நடிகைகள் பலரும் மது விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ரெஜினா ஒரு மது விளம்பரத்தில் நடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, பலரும் அவரை திட்ட துவங்கிவிட்டனர். பணம் எல்லாவற்றையும் செய்ய வைக்கிறது.
ஆரோக்கியமான விளம்பரத்திற்கு மது குடிப்பது நல்லது போல என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், பலரும் அவரை திட்டி வருகின்றனர்.