Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர் 'ரீ-என்ட்ரி'... ‘இதுக்கு பருத்திமூட்டை’.. ரசிகர்கள் கிண்டல்!

by சிவா |
biggboss
X

#image_title

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

ஏற்கனவே மொத்தமாக 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை மொத்தமாக இறக்குமதி செய்து விட்டதால் இதற்கு மேலும் வைல்டு கார்டு போட்டியாளர்களை தேட முடியாது என, பிக்பாஸ் முடிவு செய்துள்ளார். இதனால் இதுவரை வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களையே மீண்டும் உள்ளே அனுப்புவது அவரின் மெகா திட்டமாக உள்ளது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: ஏன் அவருக்கு கையில்ல?… இந்த கருமத்தை எல்லாம் பாக்க முடியல!

குறிப்பாக அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி கிணற்றினை தாண்டுகிறது. 5௦-வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. இது செவ்வாய் அல்லது புதன்கிழமை ஒளிபரப்பாகலாம். இதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் நிகழ்ச்சிக்குள் ரீ என்ட்ரி ஆகிறார். பெண்கள் அணியில் ஒருவர் செல்லலாம் என அனைவரும் நினைத்திருக்க, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஆண் போட்டியாளர் அர்னவை வீட்டுக்குள் பிக்பாஸ் அனுப்பி வைக்கிறார்.

இதை அர்னவும் உறுதி செய்து விட்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 'ஹேய் ஜால்ராஸ்' என்று கேப்ஷன் போட்டு நான் உள்ளே செல்கிறேன் என்று தன்னுடைய 'தீவிர' ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.

arnav

#image_title

மனைவியை பிரிந்தது, சக போட்டியாளர் அன்ஷிதாவுடன் காதல் என பெரும் சர்ச்சைகளில் அடிபட்டதால் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் உள்ளே சென்றும் இவர் எந்த ஆணியையும் புடுங்கவில்லை.

இதனால் வெளியே துரத்தி விட்டனர். தற்போது பழைய வீடியோக்களை பார்த்து சண்டைக்கு தயாராகி இருக்கிறார் போல. இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் உள்ளே சென்றால் அருண், விஜே விஷாலுடன் சண்டை போடுவார் வேறு என்ன செய்ய போகிறார் என்று? கிண்டலடித்து வருகின்றனர். இதுக்கு பருத்திமூட்டை குடோன்லேயே இருந்துருக்கலாம் பாஸ்!..

இதையும் படிங்க: Biggboss Tamil 8: அவங்களுக்கு ‘வெஷத்த’ வச்சு குடுத்துரலாம்… இதெல்லாம் ரொம்ப தப்பு?..

Next Story