சந்திரமுகி 2 எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?. டிவிட்டர் விமர்சனம்...
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. ஏற்கனவே, சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு என பலரும் நடித்திருந்தனர். அந்த படம் ரஜினிக்கு சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இப்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இன்று காலை சந்திரமுகி 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு வெளியானது.
இதைத்தொடர்ந்து முதல் பாதியை பார்த்துவிட்ட ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் முதல் பாதி எப்படி இருந்தது என பதிவிட்டு வருகின்றனர். முதல் பாதி பற்றி எக்ஸ் தளத்தில் பலரும் பதிவிட்டதை இங்கே பார்ப்போம். இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படமாக வந்துள்ளது. ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. இடைவேளை காட்சியும் நன்றாக வந்திருக்கிறது. எதிர்பார்க்காத டிவிஸ்ட், சர்ப்பரைஸ் இருக்கிறது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத் வரும் காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும், திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதாகவும், கூசும்ப்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதாகவும், இப்படத்தை திரையரங்கில் பாருங்கள் எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்படம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. வடிவேலுவுக்கு ஒரு நல்ல கம்பேக், படம் கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் இப்படத்தை பற்றி சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை பார்க்கும்போது இப்படம் எல்லோருக்கும் பிடித்த ஒரு படமாக வெளிவந்துள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.