latest news

இதுக்கு மட்டும் கத்துதா இந்த பல்லி!.. திரிஷாவை பொளக்கும் ரசிகர்கள்!…

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகிறார் என பலரும் சொல்லிவரும் நிலையில் அவருடன் நடிகை திரிஷா நெருக்கம் காட்டி வந்தார்.. விஜயுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வந்தார்.
ஒருபக்கம் விஜயின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்.. மேலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்புள்ளது. நாங்கள் வீட்டில் இருக்கும் போதே அவரை கூட்டி வந்து வீட்டில் எனது கணவர் விஜய் குடும்பம் நடத்தினார் என்றெல்லாம் விவாகரத்து மனுவில் கூறியிருந்தார்.

அது நடந்து சில நாட்களிலேயே விஜய் திரிஷாவை அழைத்துக்கொண்டு சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி பலரும் விஜயை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் திரிஷா அமைதியாக இருந்தார்.. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பார்த்திபனிடம் திரிஷாவின் பொன்னியின் செல்வன் கெட்டப் குந்தவை புகைப்படத்தை காட்டி கருத்து கேட்டதற்கு ‘குந்தவையை கொஞ்ச நாளைக்கு வீட்டில் குந்த வைத்தால் நல்லது.. பிரச்சனை வராமல் இருக்கும்’ என சொல்லிவிட்டார்..

இதையடுத்து விஜய் ரசிகர்கள் பலரும் பார்த்திபனை திட்ட துவங்கினார்கள்.. மேலும் திரிஷாவும் தனது எக்ஸ் தளத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. அறிவில்லாத குரூர தனமான பேச்சு.. மைக் இருந்தால் என்னவென்றால் பேசுவீர்களா?.. என் புகைப்படத்தை போட சொன்னவர்களை விட அதற்கு பேசியவர் மோசமாக இருக்கிறார்’ என்றெல்லாம் பதிவிட்டார்..

இதையடுத்து, பார்த்திபனும் வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்டார்.. அதில் நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படத்தை காட்டி கருத்து கேட்டார்கள்.. வேகமாக பதில் சொல்ல வேண்டும் என்பதால் வார்த்தை ஜாலத்திற்காக குந்தவையை வீட்டில் குந்த வைத்தால் நல்லது என்று சொன்னேன்.. மேடையிலிருந்து நான் இறங்கிவந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே ‘குந்தவையை தவிர்த்திருக்கலாம்’ என்றார். உடனே நிகழ்ச்சி நடத்துபவரிடம் ‘திரிஷா பற்றி சொன்னதை எடுத்து விடுங்கள்’ என்று சொன்னேன்.. ஆனால் யாரோ ஒருவர் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டார்கள்.. இதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்’ என பதில் சொன்னார்.

இந்த விஷயம் முடிந்துவிட்டது. ஆனால் விஜயுடன் திருமணத்திற்கு ஜோடி போட்டு திரிஷா வந்த போது ஊரே அவரை திட்டியது. ஆனால் அதைப்பற்றி ஒரு கருத்து கூட தெரிவிக்காமல் இருந்த திரிஷா தன்னுடைய போட்டோவுக்கு பார்த்திபன் சொன்ன கமெண்ட்டுக்கு கோபப்பட்டிருக்கிறார்..

இதோ போல்தான் லியோ படம் வெளியானபோது தன்னை பற்றி மன்சூர் அலிகான் ஏதோ சொன்னார் என்பதற்காக கோபமாக கருத்து சொல்லி, மன்சூர் மன்னிப்பு கேட்கவில்லை வழக்கு தொடர்வேன்’ என சொன்னார் திரிஷா.. ஆனால் ‘விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வரணும்’ என நயினார் நாகேந்திரன் சொன்னபோது ‘உயர் பதவியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று மிகவும் மென்மையாக கருத்து தெரிவித்திருந்தார்.. தற்பொழுது பார்த்திபன் சொன்ன கமெண்ட்டுக்கு பொங்கியிருக்கிறார்.

இதையடுத்து ‘உண்மையில் விஜய்க்கும் உங்களுக்கும் என்ன மாதிரியான உறவு என்பதை பற்றித்தான் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.. ஆனால் அதை பற்றி பேசாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்கிறீர்கள்’ என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

23 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

54 minutes ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

2 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago