Cinema News
ஏன் இவர் நேரில் போய் உதவி செய்ய மாட்டாரா?!. சொகுசு அரசியல் செய்கிறாரா விஜய்?..
TVK Vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சியினர் போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை குழந்தைகள் 7 பேர் மண்ணில் புதைந்து இறந்து போனார்கள். எனவே, அந்த பகுதியை முதல்வர், எதிர்கட்சி தலைவர், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் என பலரும் நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், விஜய் பாதிக்கப்பட்ட மக்களில் 300 பேரை தேர்ந்தெடுத்து சென்னையில் உள்ள தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து அங்கு அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அரசியலுக்கு வந்துவிட்ட விஜய் நேரில் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனையை கேட்டு உதவி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு தனது இடத்திற்கு அவர்களை வரவழைப்பது சொகுசு அரசியல் என விமர்சிக்க துவங்கிவிட்டனர்.
‘நான் அங்கே போனால் இதுபோல இப்படி அமர்ந்து பேசியிருக்க முடியாது. அங்கே நான் வந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும். மக்களை சந்தித்து பேச முடியாது. எனவே, நேரில் வந்து நிவாரணம் கொடுக்கவில்லை என தவறாக நினைக்க வேண்டாம் என நிவாரணம் பெற்ற மக்களிடம் சொல்லி இருக்கிறார் விஜய்.
இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜய் நேரில் போவாரா இல்லை பனையூர் அலுவலகத்திலிருந்து வீடியோ காலில் பேசி மக்களிடம் ஓட்டு கேட்பாரா?. இதெல்லாம் கட்சி ஆரம்பிக்கும் முன்பு தெரியாதா? இதையே சாக்காக சொல்லி இன்னும் எத்தனை வருடங்களை ஓட்டுவார்கள்?
கூட்டத்தை சமாளிக்க காவல்துறை மற்றும் பயிற்சி பெற்ற தொண்டர் படை போதாதா? எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோர் இப்படித்தானே மக்களை சந்தித்தார்கள்? கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் பிரச்சார சமயத்தில் மட்டும் போய் பாரத்தால் எப்படி வாக்களிப்பார்கள்?
இனியாவது இப்படியான பெரும் இன்னல்களை மக்கள் சந்திக்கையில் உடனே சென்று சந்திக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கனமழை பாதித்த மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் இவர் மட்டும்.. மக்களை தனது அலுவலகத்திற்கு வரவைப்பது சொகுசு அரசியல். மக்களுக்கான அரசியல் அல்ல’ என அரசியல் விமர்சகர் தமிழ் இனியன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: தொடர் வெற்றியை கொடுத்தும் பொழைக்க தெரியாத ஆளா இருக்காரே மணிகண்டன்..