Cinema News
வசனம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?!.. நடிகர் விஜயை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து புரட்சி இயக்குனர் என அழைக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திர சேகரின் மகன் நடிகர் விஜய். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தந்தையை விஜய் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அவரை நடிகராக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால், விஜயை வைத்து படம் எடுக்க மற்ற தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், பல தயாரிப்பாளர்களை சந்தித்து பேசி விஜயை வளர்த்துவிட்டவர் எஸ்.ஏ.சி.
விஜயின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். விஜய் நடித்த அனைத்து படங்களின் கதையையும் கேட்டு தேர்வு செய்தவர் அவர்தான். அதேபோல், ஒருபக்கம் அவரின் ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைப்பது, மன்றம் தொடர்பான பணிகளை முடுக்கிவிடுவது, ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது என விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் இட்டவரும் அவர்தான்.
ஆனால், கடந்த சில வருடங்களாக விஜயும் – எஸ்.ஏ.சியும் பிரிந்து வாழ்கின்றனர். தான் நடிக்கும் படங்களின் கதையை விஜயே தேர்வு செய்கிறார். அதோடு, சென்னை சாலிகிராமத்தில் அப்பா அம்மாவுடன் ஒன்றாக வசித்த விஜய், தந்தை – தாயை பிரிந்து நீலாங்கரையில் தனி வீடுகட்டி வசித்து வருகிறார். அதோடு, தன்னையோ தனது குழந்தைகளை பார்க்கவோ கூட விஜய் தனது தந்தைக்கு அனுமதி கொடுப்பதில்லை. இதை பட்டும்படாமல் எஸ்.ஏ.சியே பல பேட்டிகளில் கூறிவிட்டார். ஆனாலும் விஜயின் மனம் இறங்கவில்லை. அவர்களுக்கும் இருப்பது தனிப்பட்ட பிரச்சனை. அதை பற்றி நாம் பேசக்கூடாது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், சினிமா விழாக்களிலும், தான் நடிக்கும் திரைப்படங்களிலும் அன்பு, பாசம் பற்றியெல்லாம் விஜய் கிளாஸ் எடுப்பதை ஏற்கமுடியவில்லை என சினிமா பத்திரிக்கையாளர்களும், நெட்டிசன்களும் சமூகவலைத்தளங்களில் பேச துவங்கிவிட்டனர். வாரிசு பட இசைவெளியீட்டு விழாவில் விஜயின் தாய் ஷோபாவும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த விஜய் எல்லோருக்கும் கை கொடுத்து சில வார்த்தைகள் பேசி சென்றார். ஆனால், அம்மா, அப்பாவை அவர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஒரு சம்பிரதாயத்துக்காக தந்தை எஸ்.ஏ.சியை கட்டியணைப்பது போல பாவனை செய்துவிட்டு சென்றுவிட்டார். அப்போது எஸ்.ஏ.சி கண்ணில் ஏற்பட்ட ஏக்கம் ஒரு தந்தையின் மனவேதனையை காட்டியது. இது அந்த வீடியோவை நன்றாக பார்த்த எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே மேடையில் அன்பு, பாசத்தை பற்றி விஜய் பேசினார். தனது அப்பா அம்மா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதேபோல், வாரிசு பட டிரெய்லரில் ‘குடும்பத்திற்குள் பிரச்சனை இருக்கலாம். ஆனால் நமக்கு குடும்பம் ஒன்னுதான்’ என விஜய் வசனம் பேசுகிறார். தந்தையையும், தாயையும் ஒதுக்கிவிட்டு வாழும் விஜய் இப்படியெல்லாம் வசனம் பேசுகிறார். சினிமாவில் பேசும் வசனத்தை விஜய் சொந்த வாழ்வில் கடைபிடிப்பாரா? என சினிமா பத்திரிக்கையாளர்களும், நெட்டிசன்களும் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.
இதற்கான பதில் விஜயிடம்தான் இருக்கிறது!..
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் நடிப்பில் திருப்தியடையாத இயக்குனர்.. மீண்டும் கேட்ட ஒன் மோர்.. பதறிய படக்குழு…