சமந்தாவுக்கும் கீர்த்திக்கும் உள்ள ஒற்றுமை.. கல்யாணமே முடியல அதுக்குள்ள இப்படியா பேசுவீங்க?..

keerthi-sam
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரை நடிகை சமந்தாவுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரகுதாத்தா. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: என்னது ரஜினி மந்திரவாதியா? ஜப்பான், சீனாவில் அவர் படம் ஓடுவதற்கு இதுதான் காரணமா?
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கில் மட்டும் இல்லாமல் தற்போது ஹிந்தியிலும் கீர்த்தி சுரேஷ் கால் பதித்துள்ளார். தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அவர் அறிமுகமாக இருக்கின்றார்.

keerthi marriage
கிளாமர் குயின்:
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தபோது கவர்ச்சியே காட்டியதில்லை கீர்த்தி சுரேஷ். ஆனால் பேபி ஜான் திரைப்படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றார். அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள். ஹிந்திக்கு சென்றதும் கீர்த்தி சுரேஷ் இப்படி மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடலில் அவர் அணிந்திருந்த உடை படுகிளாமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷின் காதல்:
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இந்த நடிகருடன் காதல், அந்த இசையமைப்பாளர் உடன் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. அது மட்டுமில்லாமல் அவர் தனது கல்லூரி நண்பர் ஒருவரை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் உறுதி செய்திருந்தார்கள்.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது காதலர் ஆண்டனி தட்டிலை அறிமுகம் செய்து வைத்தார். 15 வருடங்களாக காதலித்து வருகிறோம் என்று அவர் கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்னது 15 வருடங்கள் காதலா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வந்தார்கள். அது மட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பாரா என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
கோவாவில் திருமணம்:
நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது காதலர் ஆன்டனி தட்டிலுக்கும் வரும் டிசம்பர் 10ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமண பத்திரிக்கை புகைப்படங்களும், நேற்றிலிருந்து சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. மேலும், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் கோவாவிற்கு எடுக்கப்பட்டிருக்கும் பிளைட் டிக்கெட்டை பகிர்ந்து அந்த தகவலையும் உறுதி செய்து இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthi-antony
கீர்த்தி சுரேஷ் சமந்தா:
கோவாவில் திருமணம் அதுவும் இரண்டு முறைப்படி திருமணம் என்று தகவல் வெளியானது முதலே ரசிகர்கள் நடிகை சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா கோவாவில் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கும் இரண்டு முறை படி திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இதையும் படிங்க: கமலோட அந்த படத்தை 60 நாட்கள் தொடர்ந்து நைட் ஷோ பார்த்த இயக்குனர்!.. அட அவரா?!.
ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனை கீர்த்தி சுரேஷ் திருமணத்துடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இதைப் பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் திருமணம் கூட இன்னும் முடியவில்லை அதற்குள் இப்படி பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.