ரத்னவேலு பொண்டாட்டி என்னயா பாவம் செஞ்சா?... புள்ளிங்கோ அட்ராசிட்டி!.. ரொம்ப ஓவரா போறீங்கடா!..
கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் மாமன்னன் பட டிரெண்டிங்தான் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இந்த படத்தில் ஃபகத் பாசில் ஏற்று நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம்தான். இந்த படத்தில் சாதி வெறி பிடித்த மனிதராக ரத்தினவேல் கதாபத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
சாதி வெறி பிடித்த மனிதர்களால் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்ன கொடுமைகளையெல்லாம் அனுபவிக்கிறார்கள் என்பதை மாரி செல்வராஜ் இந்த படத்தில் காட்டியிருந்தார். இதைத்தான் அவர் ரசிகர்களுக்கும், சமுதாயத்திற்கும் சொல்ல நினைத்தார். மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் வெளியானபோது இது ரசிகர்களிடம் சரியாக போய் சேர்ந்தது.
இதையும் படிங்க: டேய் நான் சொன்னதே வேறடா!. போதும் நிறுத்துங்கடா!.. தலையில் அடித்து புலம்பும் மாரி செல்வராஜ்!…
மாமன்னன் படத்தில் வரும் ரத்தினவேல் கதாபாத்திரம் கௌரவம், சாதி பெருமை ஆகியவற்றை எப்போதும் சுமந்து கொண்டு அலையும். மாமன்னன் கதாபாத்திரத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரம் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் ரத்தினவேல் முன்பு இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருக்கும் கதாபாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அதே மாமன்னன் கதாபாத்திரம் தேர்தலில் வெற்றி பெறுவது போலவும், ரத்தினவேல் கதாபாத்திரம் தோல்வி அடைவது போலவும் கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சாதிவெறி பிடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை பல சாதியினரும் கையில் எடுத்து ரத்தினவேல் எங்கள் சாதி என சொல்வது போல் அவரவர் சாதி பெருமை பாடலை ரத்தினவேல் காட்சிகளுடன் இணைத்து வீடியோவாக உருவாக்கி சமூகவலைத்தளங்களில் பகிர இந்திய அளவில் #Fahadfaazil என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.
மொத்தத்தில், மாரி செல்வராஜ் என்ன சொல்ல வந்தாரோ அந்த கருத்தே நீர்த்துப்போனது. சாதி வெறி பிடித்த ஒருவரை தங்களின் தலைவனாக காட்டிகொள்ளும் மனநிலை மிகவும் மோசமாக இருக்கிறது என பலரும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒருபடி மேலே போய் முகநூலில் ‘ரத்னவேலு பொண்டாட்டி ரசிகர்கள்’ என ஒரு குரூப்பை சிலர் துவங்கியுள்ளனர். இது பலரையும் சிரிக்க வைத்தாலும் இது எங்கே போய் முடியுமோ என பலரும் தலையில் அடித்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: அஜீத்தும் அப்படித்தான்!.. ஆனா விஜயை மட்டும் கார்னர் செய்யும் ரஜினி.. இது தப்பு தலைவரே!..