வாயை விட்டு மாட்டிகொண்ட அஸ்வின்...வச்சு செய்யும் நெட்டிசன்கள்...

by சிவா |
ashwin
X

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ashwin

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதைதான்’ எனப்பேசியிருந்தார்.

meem

இது திரையுலகினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உதவி இயக்குனர்கள் இவர் மீது கோபம் அடைந்துள்ளனர். அவரின் பேச்சு கதை சொல்ல வரும் இயக்குனர்களை அவமதிப்பதாக உள்ளது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

meem

அஸ்வின் நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் இவ்வளவு திமிறான பேச்சா? என பலரும் கொந்தளித்துள்ளனர்.

ஒருபக்கம் நெட்டிசன்கள் அஸ்வினை கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்க துவங்கிவிட்டனர். அஸ்meemவின் தொடர்பான சில மீம்ஸ்களை இங்கே பதிவிட்டுள்ளோம்.

meem

Next Story