ஒரு பாட்டுக்காக படம் பாக்க சொல்றியா!....டிடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்....
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை எனவும், நெல்சனின் வழக்கமான ஸ்டைல் இப்படத்தில் இல்லை எனவும், டார்க் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் பொதுவான ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிடி என அழைக்கப்படும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியதர்ஷினி இப்படத்தை பாராட்டி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்தில் ‘அரபிக்குத்து ஒரு பாட்டு போதும் ஃபுல் பைசா வசூல், விஜய் சார் டேன்ஸ் சூப்பரா ஆடுவார்னு எல்லாருக்கும் தெரியும். நெல்சன் ரசிச்சு எடுத்திருக்கார்’ என பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘அப்ப ஒரு பாட்டுக்காக படம் பாக்க சொல்றியா.. ஒரு படத்தை பாக்க பாட்டும் மட்டும் நல்லா இருந்தா போதாது. அந்த ஒரு பாட்ட யுடியூப்லயோ இல்ல டிவியில நாங்க பாத்துக்குறோம்’ என கிண்டலடித்து வருகின்றனர்.