காட்டினதயே மறுபடி மறுபடி காட்டுறாங்க!.. ரசிகர்களை சோதிக்கும் மாநாடு.....
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு. முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். அவருக்கும், சிம்புவுக்கும் இடையான காட்சிகள்தான் படத்தில் அதிகம்.
இப்படத்தின் முதல் காட்சி வெளியான முதலே இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் பதிவிட்டனர்.
ஆனால், தியேட்டர் வாசலில் படம் எப்படி பல யுடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் கேட்ட போது சிலர் ‘படம் நன்றாக இருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. சிம்புவுக்கு நல்ல கம் பேக்.. வித்தியாசமான கதை’ எனக்கூறினாலும், பெரும்பாலானோர் ‘முதல் பாதியில் காட்டியதையே திரும்ப திரும்ப காட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் அது சலிப்பை ஏற்படுத்தியது. நல்லவேளை இரண்டாம் பாதியில் அப்படி எதுவும் இல்லை’ என தெரிவித்தனர். சிலரோ ‘படம் சுமார்தான். எனக்கு பிடிக்கவில்லை’ என வெளிப்படையாகவே தெரிவித்தனர். இதிலிருந்து மாநாடு படத்தின் முதல் பாதி ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, எஸ்.ஜே.சூர்யாதான் படமே.. எஸ்.ஜே. சூர்யா கலக்கி இருக்கார்... எஸ்.ஜே.சூர்யா செம மாஸ். அவருக்காகவே மாநாடு படத்த பார்க்கலாம்.. எஸ்.ஜே. சூர்யா வந்த பின்னரே படம் சூடு பிடிக்கிறது ...அவர் வந்த பின்னரே படம் விறுவிறுவென செல்கிறது எனவும் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.